போஸ்டரே ஒரு மாதிரி இருக்கு.. சீதிமாரின் பெப்ஸி ஆன்ட்டி லிரிக்கல் வீடியோ.. வேற லெவலில் அப்சரா ராணி!
சென்னை: தெலுங்கு படமான சீதிமாரின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
டோலிவுட் சினிமாவில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் சீதிமார். இந்தப் படத்தில் கோபிச்சந்த் மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக உள்ளது.

பெப்ஸி ஆன்ட்டி
அந்த வகையில் படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பெப்ஸி ஆன்ட்டி என்ற டைட்டிலில் உள்ள இந்த பாடலில் ராம்கோபால் வர்மா ஒடிசாவில் இருந்து கண்டெடுத்த அப்சரா ராணி நடனமாடியுள்ளார்.

இயக்குநரே எழுதியிருக்கிறார்
பெப்ஸி ஆன்ட்டியில் அப்சரா ராணியின் ஐட்டம் பாடலாக உள்ளது. இதற்கு பிரேம் ரக்ஷித் மாஸ்டர் கோரியோகிராஃப் செய்துள்ளார். இந்தப் பாடலை கீர்த்தனா ஷர்மா பாடியிருக்கிறார். இப்பாடலை படத்தின் இயக்குநரான சம்பத் நந்தி எழுதியுள்ளார். சீதிமார் படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

பூமிகா சாவ்லா
முன்னணி ஜோடி கோபிசந்த் மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோரைத் தவிர, இந்த படத்தில் 'ஹிப்பி' நடிகை திகங்கனா சூர்யவன்ஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அவர் ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூமிகா சாவ்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Recommended Video

செம கிளாமர்
மேலும் போசானி கிருஷ்ணா முரளி, ராவ் ரமேஷ், ரெஹமான், தருண் அரோரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அப்சரா ராணி கடைசியாக மாஸ் மகாராஜா ரவி தேஜா நடித்த கிராக் படத்தில் நடனமாடினார். அதனை தொடர்ந்து இந்தப் படத்தில் மெச கிளாமர் காட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











