பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்..திரையுலகம் அதிர்ச்சி!

By

ஐதராபாத்: பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருந்தும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

 அதிகரித்து வருகிறது

அதிகரித்து வருகிறது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637,901 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,219,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 4.59 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும்

அதிகரிக்கும்

இங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048 ஆக உயர்ந்துள்ளது. 12,948 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 பண்ட்லா கணேஷ்

பண்ட்லா கணேஷ்

முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனா வேகமாக பரவுகிறது. இதற்கிடையே பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பண்ட்லா கணேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத் திரைப்பட நகரில் வசிக்கும் இவருக்கு, சொந்தமாக கோழிபண்ணை உள்ளது. அங்கு அடிக்கடி சென்றுவருவாராம்.

Recommended Video

விஜய் பட இயக்குனருக்கு கொரோனாவால் ஏற்பட்ட சோகம் | Thamizhan
 முக்கிய வேடங்கள்

முக்கிய வேடங்கள்

அப்போது திடீரென்று நடத்தப்பட்ட சோதனையின் போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பண்ட்லா கணேஷ், பவன் கல்யாணின் கபார் சிங், ஜூனியர் என்.டி.ஆரின் பாட்ஷா, டெம்பர் உட்பட பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்தவர். மகேஷ்பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன், சரிலேரு நேக்கெவ்வரு உட்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X