தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
ஹைதராபாத்: 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கினார்.
இதையடுத்து 96 படத்தை இயக்கிய பிரேம் குமாரையே அதை தெலுங்கில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் செய்தார் ராஜு.

பிரேம் குமார்
தெலுங்கில் சமந்தா, ஷர்வானந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் பிரேம் குமாருக்கும், தில் ராஜுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ரீமேக் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தில் ராஜு
96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தாவே ரீமேக்கிற்கும் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று பிரேம் குமார் தெரிவித்துள்ளார். ஆனால் தில் ராஜுவோ கோவிந்த் வேண்டாம் என்று கூறி பிரபல இசையமைப்பாளரை பரிந்துரை செய்துள்ளார்.

96
பிரேம் குமார் பரிந்துரை செய்த இசையமைப்பாளரை தில் ராஜுவுக்கு பிடிக்கவில்லை. தில் ராஜு பரிந்துரைத்த இசையமைப்பாளர் தனது படத்திற்கு வேண்டாம் என்று கறாராக தெரிவித்துள்ளார் பிரேம் குமார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மாற்றம்
96 படத்தை அப்படியே ரீமேக் செய்ய விரும்புகிறாராம் பிரேம் குமார். ஆனால் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் நிறைய மாற்றம் செய்யுமாறு கூறுகிறாராம் தில் ராஜு. 96 படத்தின் ஹைலைட்டான பள்ளிக் காதல் பகுதி ரீமேக்கில் இருக்காது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











