twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் மாதிரி தெலுங்குல டச் பண்ணலையாமே.. கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் '96' ரீமேக் நஷ்டமாம்!

    By
    |

    Recommended Video

    Jaanu Movie Review | Samantha | Sharwanand | Prem Kumar | Ram Jaanu

    விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்,

    96. பிரேம் குமார் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி என்ற ஜானுவாக த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.அனைவருடைய காதலையும் உலுக்கிப் பார்த்த, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.

    தெலுங்கில்

    தெலுங்கில்

    இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷூம் நடித்திருந்தனர். திருமணத்துக்கு பிறகு பாவனா நடித்த முதல் படம் இது. சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழில் ஹிட்டான அளவுக்கு கன்னடத்தில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

    சமந்தா

    சமந்தா

    விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். கோவிந்த் வசந்தா இசை அமைத்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்தது. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இயக்குனர் இதை மறுத்திருந்தார்.

    நெருக்கமான படம்

    நெருக்கமான படம்

    இந்தப் படத்துக்கு ஜானு என்று தெலுங்கில் டைட்டில் வைத்திருந்தனர். இந்தப் படம் கடந்த 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. என் மனதுக்கு நெருக்கமான படம் இது என்று நடிகை சமந்தா தெரிவித்திருந்தார். அதோடு படம், சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பதாகவும் சொன்னார். ஆனால், அவர் சொன்னது போல படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    ரூ.21 கோடிக்கு

    ரூ.21 கோடிக்கு

    இந்தப் படத்தின் தியேட்டரிக்கல் உரிமையை ரூ.21 கோடிக்கு விற்றுள்ளனர். அதை விட அதிகமாக வசூலிக்கும் என்று நம்பியிருந்தனர். ஆனால், மொத்தமாக 70 சதவிகித நஷ்டத்தை படம் சந்திக்கும் என்கிறார்கள், டோலிவுட்டில். தமிழில் ரசிகர்களை டச் பண்ணிய காதல் எமோஷன், தெலுங்கு படத்தில் மிஸ்சிங் என்பதால் எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லையாம்.

    அமெரிக்காவில்

    அமெரிக்காவில்

    மொத்தமாக, இந்தப் படம் வெறும் 7 கோடி ரூபாய் மட்டும் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் சமந்தாவுக்காக மட்டுமே இந்த வசூலாம். வழக்கமாக தெலுங்கு படங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வசூல் கிடைக்கும். எந்த படம் வெளியானாலும் பெரிய ஓபனிங் இருக்கும். ஆனால், இந்தப் படம் அங்கும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். ஜானுவை ரசிகர்கள் ஓரங்கட்டியது ஏன் என்பது யோசித்து வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

    English summary
    sources said, Telugu remake of '96', titiled jaanu, didn't do
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X