Just In
- 5 min ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 16 min ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 22 min ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 1 hr ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Sports
பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!
- Automobiles
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தெலுங்கில் ரீமேக்காகும் ஓ மை கடவுளே .. பூஜையும் போட்டாச்சு!
சென்னை : அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த ஓ மை கடவுளே திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது இந்த திரைப்படம் தெலுங்கில் உருவாகிறது.
விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்க, அசோக் செல்வன்,வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
ஏமாற்றியது இந்தாண்டு.. 2021-ல் எதிர்பார்க்கப்படும் பிரமாண்ட படங்கள்.. மாஸ்டர், வலிமை.. அப்புறம்?
ஓ மை கடவுளே திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட நிலையில் இப்பொழுது இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களையும் மகிழ்விக்க தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

ஃபேண்டஸி கட்சிகளையும்
சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வருபவர்கள் தங்களுக்குள் இருக்கும் காதலை எப்போது கண்டறிகிறார்கள், அந்த காதலை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மையமாக கொண்டு அழகாக சில ஃபேண்டஸி காட்சிகளையும் தெளித்துவிட்டு ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கி இருந்த அஸ்வத் மாரிமுத்து தனது அனைத்து அடுத்த படமும் தமிழில் இயக்கி இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.

தோற்றத்தில்
நடிகர் அசோக் செல்வன் தயாரித்து நடித்திருந்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்க திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி திரையரங்கில் சக்கைப்போடு போட்டது.

சிறந்த திரைப்படமாக
நண்பர்களாக பழகி வருபவர்கள் தங்களுக்குள் இருக்கும் காதலை எவ்வாறு கண்டறிந்து கடைசியில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை சுவாரசியம் குறையாமல் காட்டியிருக்க 2020 இல் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஓ மை கடவுளே தனிச் சிறப்பை பெற்று சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டது.

முதல் தெலுங்கு அறிமுக
தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஓ மை கடவுளே திரைப்படம் இப்பொழுது தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் தொடங்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தை தமிழில் இயக்கிய அஷ்வத் மாரிமுத்து தெலுங்கிலும் இயக்க இருக்கும் நிலையில் இது இவருக்கு முதல் தெலுங்கு அறிமுக திரைப்படமாகும்.

மாரிமுத்து
இந்த மகிழ்ச்சியான செய்தியை அஷ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளதை அடுத்து, இந்த ஆண்டு தெலுங்கில் சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற "ஹிட்" திரைப்படத்தில் நடித்த விஷ்வக் ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஓ மை கடவுளே -வின் தெலுங்கு ரீமேக்கை தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மீண்டும் தமிழ் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.