மதுவருந்திவிட்டு கார் பயணம்... விபத்தில் உயிரிழந்த சீரியல் நடிகை!
ஐதராபாத் : தெலுங்கில் வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த காயத்ரி என்ற நடிகை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தெலுங்கு சீரியல் நடிகை
தெலுங்கில் சீரியல் மற்றும் வெப் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் காயத்ரி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களில் தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான ரோகித் என்பவருடன் பங்கேற்றார். ஆட்டம் பாட்டம் என களைகட்டிய அந்த கொண்டாட்டத்தில் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

குடிபோதையில் கார் பயணம்
இதையடுத்து அவர்கள் தங்களது வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். ரோகித் குடிபோதையில் கார் ஓட்டியதாக தெரிகிறது. காயத்ரி காரில் அவருடன் பயணம் செய்துள்ளார். இதையடுத்து கச்சிபௌலி என்ற இடத்தில் மலைப்பகுதியில் ரோகித் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

நடிகை உயிரிழப்பு
அப்போது தறிகெட்டு வேகமாக போன கார், சாலையில் வேலை செய்துக் கொண்டிருந்த தோட்டக்காரப் பெண் மகேஸ்வரி மீது மோதி சாலையோர தடுப்பில் மோதி நொருங்கியுள்ளது. இந்த விபத்தில் மகேஸ்வரி மற்றும் காரில் அமர்ந்திருந்த காயத்ரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நண்பர் படுகாயம்
இதையடுத்து காரை ஓட்டி சென்ற ரோகித் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்கக்ப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ரோகித் மதுவருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி
இதனிடையே, காயத்ரியின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதுவால் ஏற்பட்டுள்ள இந்த கோர மரணம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











