என்னது நானியோட சீதாராமம் நாயகி ஜோடி சேர்ராங்களா .. சூப்பரப்பு!

சென்னை: தெலுங்கில் நேச்சுரல் ஸ்டார் என்று புகழப்படுபவர் நடிகர் நானி. தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர் இவர் நடிப்பில் தமிழில் வெளியான நான் ஈ படம் பட்டையை கிளப்பியது.

தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் இவர் பான் இந்தியா ஸ்டாராகவும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றிப் படங்களாகியுள்ளன.

 ரசிகர்களின் விருப்பமான நடிகர்

ரசிகர்களின் விருப்பமான நடிகர்

நம்ம எல்லாருக்கும் பிடிச்சமான ஒரு தெலுங்கு நடிகர்னு சொன்னா அதுல நடிகர் நானிக்கு முக்கியமான இடம் இருக்கும். தன்னோட இயல்பான நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் இவர். இவரோட நடிப்பில் வெளியான நான் ஈ ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பெற்ற படம். அந்த படத்தில் சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டார் நானி.

 நான் ஈ படம்

நான் ஈ படம்

நான்ஈ படத்தில் சமந்தாவை இம்பிரஸ் பண்ணுவதற்காக நானியின் மெனக்கடல்கள் ரசிகர்களை அப்படி கவர்ந்தது. தொடர்ந்து தமிழிலும் இவர் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த அளவுக்கு தமிழ்படங்களில் இவர் கவனம் செலுத்தவில்லை மாறாக தெலுங்கு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக இவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். இளம் ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை கவர்ந்து வருகிறார்.

 ஷியாம் சிங்கா ராய் படம்

ஷியாம் சிங்கா ராய் படம்

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படத்தில் இவரது மெச்சூர்டான நடிப்பு அனைவரையும் கவர்ந்த நிலையில், தொடர்ந்து ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்கேற்ப சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார் நானி. தற்போது இவர் தனது 30வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

 அடடே சுந்தரா படம்

அடடே சுந்தரா படம்

டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்கு வந்து ரசிகர்களை கவர்ந்த நானி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான அடடே சுந்தரா படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தற்போது தசரா என்ற படத்தில் நடித்து வருகிறார் நானி. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் நானி 30 படத்தின் சூட்டிங்கும் துவங்கவுள்ளது.

 இறுதிக்கட்டத்தில் தசரா படம்

இறுதிக்கட்டத்தில் தசரா படம்

தசரா படத்தில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், நானி 30 படத்தில் நானிக்கு ஜோடியாகவுள்ளார் மிருணாள் தாக்கூர். இவர் நானியின் தசரா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த நிலையில் தற்போது நானியுடன் நேரடியாக நடிக்கவுள்ளார். மிருணாள் தாக்கூர் முன்னதாக சீதாராமம் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், தற்போது நானியுடன் இணையவுள்ளார்.

 நேச்சுரல் ஸ்டார் நானி

நேச்சுரல் ஸ்டார் நானி

நேச்சுரல் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நானி, இந்தப் படத்தில் முதல் முறையாக மிருணாள் தாக்கூருடன் இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் சௌர்யுவ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். புத்தாண்டையொட்டி இந்தப் படத்தின் கிளிம்ப்சை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் அப்பா -மகள் சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X