அடேங்கப்பா..ஆடம்பர பங்களா..சொகுசு கார்..ராம் சரணின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : நடிகர் ராம் சரணின் 38வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அவரின் சொத்துக்குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தனது தந்தையைப் போலவே தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவாக விளங்கி வருகிறார்.

ராம் சரண் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார்.

நடிகர் ராம் சரண்

நடிகர் ராம் சரண்

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்று, வசூலை அள்ளியது. இதையடுத்து, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் வாய்பிளந்தனர்.

அடுத்தடுத்த ஹிட்படங்கள்

அடுத்தடுத்த ஹிட்படங்கள்

மகதீரா திரைப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தின் மூலம் ராம் சரண் தமிழ் ஆடியன்சுக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, Racha, Naayak, Yevadu, Dhruva, Rangasthalam என வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து தன்னை கமர்ஷியல் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார் ராம் சரண் .

ஆர்ஆர்ஆர் படத்தில்

ஆர்ஆர்ஆர் படத்தில்

இதையடுத்து, மீண்டும் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல ஜூனியர் என்டிஆர் பீம் ரோலில் நடத்திருந்தார். இரண்டு ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடமில்லாமல் இருவரும் மாஸ்காட்டி இருந்தனர். இத்திரைப்படம் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கரை வென்று, உலகம் முழுவதும் இருவரையும் மாஸ் ஹீரோவாக்கியது.

ராம் சரணின் சொத்து விவரம்

ராம் சரணின் சொத்து விவரம்

இந்நிலையில், ராம் சரண் தனது 38வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இணையத்தில் ராம் சரணின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் ஆடம்பர பங்களாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். 25,000 சதுர அடியில் ரூ. 40 கோடி மதிப்பு கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கோயில், ஜிம் என அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன.

கோடியில் சம்பளம்

கோடியில் சம்பளம்

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு முன் வரை ரூ.35 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கி ராம் சரண். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தியுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1370 கோடியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவர் தயாரிப்பாளராகவும் இருப்பதால், இவரது சொத்து மதிப்பு குறித்து துல்லியமாக தெரியவில்லை. அதுமட்டும் அல்லாமல் டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் 34 பிராண்டுகளின் விளம்பர தூதர் என நாள் ஒன்றிற்கு பலகோடி வருமானம் ஈட்டுகிறாராம்.

கேம் சேஞ்சர்

கேம் சேஞ்சர்

ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு கேம் சேஞ்சர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராம் சரணின் பிறந்த நாளான நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X