"அந்த மாதிரி" காட்சியில் நடிக்கும் போது ஒரு மாதிரி இருந்தது.. மனம் திறந்த ராம் சரண் மனைவி!
சென்னை: தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரின் ஒரே மகன் ராம்சரண் தேஜாவும் டோலிவுட்டில் மாஸான நடிகரான இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடல் ஆஸ்கார் விருதை வென்றது. இந்நிலையில், ராம்சரணின் மனைவி உபாசனா, அவர் மற்ற நடிகைகளுடன் நெருங்கி அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது, மிகவும் சங்கடமாக உணர்ந்தேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மகதீரா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருக்கிறார். இவருக்கும் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர், பிரதாப் சி.ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

ராம் சரணின் மனைவி: ராம் சரணுடன் திருமணம் ஆன புதிதில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டார் உபாசனா. மகதீரா படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரண் புகழின் உச்சியில் இருந்த காலம் அது. அவரை திருமணம் செய்து கொண்ட உபாசனா கொஞ்சம் கூட அவருக்கு பொருத்தமானவராக இல்லை என பலரும் தங்களது வாய்க்கு வந்தவாறு பேசினர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற பிற்போக்குத்தனமாக விமர்சனங்களையும் இவர்கள் சந்தித்தனர்.
11 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம்: இதையடுத்து, உபாசனா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அவரின் வளைகாப்பு துபாயில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள ராம்சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சங்கடமாக உணர்ந்தேன்: இந்நிலையில், ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா தனது கணவர் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.அதில், என் கணவர் ராம் சரண் மற்ற நடிகைகளுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது, நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஏன் என்றால், நான் சினிமா பின் புலம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதால், அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரிடம், கதாநாயகிகளுடன் இப்படி நடித்துத்தான் ஆக வேண்டுமா என்று பல முறை அவரிடம் கேட்டு இருக்கிறேன்.
அப்பா செல்லம்: ஆனால் அவர், தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இது எனது தொழில் மற்றும் இதுதான் நடக்கும் என்று எனக்கு புரியவைத்தார். தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. ஆரம்பத்தில், எனக்குப் புரியவில்லை, நாங்கள் இருவரும் வெவ்வேறு உலகில் வாழ்ந்து வந்தோம். ஆனால் அவர் என்னை புரிந்து கொண்டு எனக்காக அனைத்தையும் புரியவைத்தார். அவர் என்னைவிட சிறந்தவராக இருக்கிறார் என்றார்.
அவளின் முகம் மலரும்: மேலும், குழந்தை வளர்ப்பில் நாங்கள் இருவரும் முக்கிய பங்கு வகிக்கிறோம் என்று நினைக்கிறேன். ஒரு அம்மா என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அதை விட அப்பா அதிகமாக செய்கிறார் என்று நினைக்கிறேன். நாங்கள் காராவை சமமாக வளர்க்கிறோம், என் மகள் காரா அப்பா செல்லம் என்பதை சொல்வதில், பெண், நான் மிகவும் பொறாமைப்படுகிறேன். அவள் அப்பாவை பார்த்துவிட்டாள் அவள் முகம் மலரும், அவள் கண்களில் ஒரு மின்னல் தெரியும் என்று உபானா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
கேம் சேஞ்சர்: நடிகர் ராம்சரண் தற்போது, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சரில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கியாரா அத்வானி படத்தில் நாயகி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இப்படத்தில், ராம் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











