இலங்கை: ரணில் விக்ரமசிங்கேயின் கட்சியில் இணைந்தார் தெலுங்கு நடிகை நதீஷா!
கொழும்பு: தெலுங்கு நடிகை நதீஷா ஹேமமாலி இலங்கை அரசியலில் குதித்துள்ளார். அங்குள்ள எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து மாகாண சபை தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
இலங்கையை சேர்ந்த சிங்கள சினிமா நடிகை நதீஷா ஹேமமாலி. இவர் டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் மிஸ்டர் ராஸ்கல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தமிழ் சினிமாவின் ஆர்.வி. உதயகுமார்தான் டைரக்டு செய்திருந்தார். இப்படம் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியானது.

தேர்தலில் போட்டி
இலங்கையில் தெற்கு மாகாண கவுன்சில் தேர்தல் அடுத்த ஆண்டு நடை பெறுகிறது. அதில் ஐக்கிய தேசிய கட்சியின் நடிகை நதீஷா ஹேமமாலி சார்பில் போட்டியிடுகிறார்.

அரசியல் புதிதல்ல
அரசியலில் ஈடுபடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நதீஷா, அரசியல் எனக்கு புதிதல்ல. எனது குடும்பத்தினர் நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் வழியில் நானும் அரசியலுக்கு வந்து இருக்கிறேன் என்றார்.

மொழி புரியவில்லை
‘மிஸ்டர் ராஸ்கல்'' தெலுங்கு படத்தில் மிகவும் ரசித்து நடித்தேன். உடன் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினார்கள். எனக்கு தெலுங்கு மொழி புரியவில்லை. அதனால் சரியாக உச்சரிக்க மிகவும் கஷ்டப்பட்டேன் என்றார்.

இலங்கைப் பெண்
அதனால் தான் நான் தொடர்ந்து மற்ற தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. மேலும் இலங்கையை விட்டு நீண்ட நாட்கள் வெளிநாட்டில் தங்க முடியவில்லை என்றார்.

ஆளும் கட்சியில் நடிகைகள்
அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் நடிகைகள் அனார்கலி, கீதா குமாரசிங்கே ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

நதீஷாவின் அரசியல்
உபேக்ஷா சுவர்னாமாலி என்ற நடிகை ஆளும் கட்சியில் எம்.பி. ஆக உள்ளார். அவர்களின் கவர்ச்சி போட்டியையும், பிரசாரத்தையும் முறியடிக்கவே நடிகை நதீஷா ஹேமமாலியை தேசிய கட்சி களம் இறக்குகிறது.


Click it and Unblock the Notifications