நீ உயரமா.. நான் உயரமா.. மகனிடம் மல்லுக்கட்டும்.. தெலுங்கு சூப்பர் ஸ்டார் !

ஹைதராபாத் : தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது மகனுடன் செல்ல சண்டையிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Mahesh Babu Fun with Son Gautam | Sarileru neekkevaru, Spyder • Quarantine

தெலுங்கு சினிமாவை தனது மிடுக்காலும் அசராத நடிப்பாலும் பல லட்சம் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருப்பவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார். இவரின் நிறைய படங்கள் தமிழில் மொழி பெயர்க்க பட்டும், சில தமிழ் நடிகர்கள் இவர் நடித்த படங்களை ரீமேக் செய்து அதையும் மிகப்பெரிய வெற்றியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஸ்பைடர் என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்தார். அதை வெற்றி இயக்குனர் A.R முருகதாஸ் அவர்கள் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாக வெளியிடப்பட்ட அந்த படம் கலவையான விமர்சனங்களுடன் வெற்றிபெற்றது.

 டைம் பாஸ்

டைம் பாஸ்

மகேஷ் பாபு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டார் அதில் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். மகேஷ் பாபுவுக்கு கெளதம் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இப்போது உள்ள சூழலில் இவரின் முழுநேர பொழுதுபோக்கு இவர்களுடன் மட்டுமே. சிலநாட்களுக்கு முன்னர் தனது மகள் சித்ராவுடன் படிக்கட்டில் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இப்போது அவரது மகன் கௌதமுடன் ஒரு போட்டியில் இறங்கியுள்ளார்.

 நான் உயரமா?

நான் உயரமா?

கௌதமிற்கும் இப்போது 13 வயது மட்டுமே ஆகிறது இந்நிலையில் இருவருக்கும் இடையில் யார் அதிக உயர் என்ற என்ற வாக்குவாதம் நடந்துள்ளது. அதில் மகேஷ் பாபு தனது மகனை வா யார் உயரம் என பார்த்துக் கொள்வோம் வா என செல்லமாக கூப்பிட்ட, அதற்கு கெளதம் தனது பாணியில் அப்பாவிடம் சிரித்துக்கொண்டே நீங்கள் தான் உயரம் என்று சொல்வார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

 கௌதமிற்கு ஆதரவு

கௌதமிற்கு ஆதரவு

இந்த வீடியோவை பார்த்த பலரும் கௌதமிற்கு தான் தங்களது ஆதரவு என சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவன் சின்ன பையன் இப்போது தான் 13 வயது ஆகிறது இந்த வயதில் நீங்கள் கண்டிப்பாக இவனை விட உயரம் குறைவாக தான் இருந்திருப்பீர்கள். கௌதம் உங்க வயது வரும் போது கண்டிப்பாக உங்களை விட உயரம் அதிகமாகத்தான் இருப்பான் என கௌதமிற்கு ஆதரவு கூடி கொண்டு வருகிறது.

 அழகான சண்டை

அழகான சண்டை

இந்த அழகான சண்டையை பார்த்த அனைவரும் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் மகேஷ் போட்ட பதிவிலேயே அவன்(கௌதம்) தான் உயரம் என போட்டு தனது மகனுக்காக இரண்டு இதயத்தையும் போட்டிருப்பார். மேலும் மகேஷ் பாபு தனது 27வது படத்தை சீக்கிரமே தொடங்குவார் எனவும் அதில் அவர் இரட்டையர்களாக நடிக்கிறார் எனவும் பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X