சுழன்றடிக்கும் சூறாவளியாய் மகேஷ் பாபு... வெளியானது சர்க்காரு வாரி பட்டா ட்ரெயிலர்!

ஐதராபாத் : தெலுங்குப் படவுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்க்காரு வாரி பட்டா. இந்தப் படத்தில் அவருக்கு முதல்முறையாக ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நதியா உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு

நடிகர் மகேஷ் பாபு தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகராகவும் சூப்பர்ஸ்டாராகவும் கருதப்படுகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் சர்க்காரு வாரி பட்டா என்ற படம் உருவாகியுள்ளது.

12ம் தேதி ரிலீஸ்

12ம் தேதி ரிலீஸ்

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ள இந்தப் படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப் போனது. கடந்த ஜனவரி மாதத்திலேயே இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களின் ரிலீசையடுத்து ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

அப்போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் தற்போது மே மாதம் 12ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டுள்ளது. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

முதல்முறையாக ஜோடி

முதல்முறையாக ஜோடி

இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக மகேஷ் பாபுவிற்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் சமுத்திரகனி. படத்தில் நதியாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

மிரட்டலான ட்ரெயிலர்

மிரட்டலான ட்ரெயிலர்

இந்த ட்ரெயிலர் மிகவும் மிரட்டலாக உள்ளது. சாவிக் கொத்திலிருந்து ரத்தம் வழிய வழிய நடந்து வருகிறார் மகேஷ் பாபு. தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டுகிறார். ஆனால் உடனடியாக கீர்த்தி சுரேஷுடன் காதல் செய்கிறார். இந்தப் படத்தில் வங்கி அதிகாரியாக அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது. ட்ரெயிலர் வெளியான சில நிமிடங்களில் 5 மில்லியன் வியூசை எட்டியுள்ளது. ரசிகர்கள் ட்ரெயிலரை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். முன்னதாக படத்தின் பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X