Jailer: முதலில் ஜெயிலர் படத்தை வேணாம்னு சொன்ன சூப்பர்ஸ்டார்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் 700 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை புரிந்துள்ளது.
ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்திருந்தார். படத்தில் சமாதானமான மற்றும் ஆக்ரோஷமான இருவேறு கெட்டப்புகளில் ரஜினியை பார்க்க முடிந்தது.

ஜெயிலர் படத்தை முன்னதாக நிராகரித்த சூப்பர்ஸ்டார்: நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தையும் தயாரித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் கைக்கொடுத்தது. இதனிடையே அனைத்திற்கும் சேர்த்து வைத்து ஜெயிலர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படம் கடந்த மாதத்தில் ரிலீசான நிலையில் சர்வதேச அளவில் 700 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மிர்ணா, வசந்த் ரவி, வினாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை ரசிகர்களை கவரும்வகையில் மேற்கொண்டிருந்தார் நெல்சன் திலீப்குமார். தன்னுடைய முந்தைய படமான பீஸ்ட் கொடுத்த கலவையான விமர்சனங்களால் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்த நிலையில், அதை சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் கதையை அவர் முன்னதாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்காகத்தான் உருவாக்கியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் கதையை சிரஞ்சீவிக்கு சொல்லியுள்ளார் நெல்சன். கதையை கேட்டுவிட்டு படத்தில் தனக்கு பாடல்கள் இல்லை ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்று கூறிய சிரஞ்சீவி, சிறிது காலம் காத்திருக்கும்படி சிரஞ்சிவி கேட்டுள்ளார். இதை தொடர்ந்தே இந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளார் நெல்சன்.

ஜெயிலர் படம் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் தொடர்ந்து கொண்டாட்டங்களாக மாற்றியுள்ளது. ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசளித்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், ரஜினி, நெல்சனுக்கு லாபத்திற்கான பங்கையும் கொடுத்திருந்தார். மேலும் படத்தின் மற்ற கலைஞர்களுக்கும் பரிசுகளை கொடுத்திருந்தார்.
ரஜினியின் கேரியரில் பெஸ்ட் படங்கள் அதிகமாக இருந்தபோதிலும் அவற்றில் எல்லாம் முன்னதாக சிரஞ்சீவியின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல டூயட், ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக காணப்படும். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் வித்தியாசமான ரிடையர்ட் ஜெயிலர் கேரக்டரில் நடித்திருந்தார் ரஜினி. இந்தப் படம் அவருக்கு மிகச்சிறப்பான வகையில் அமைந்த நிலையில், தனது அடுத்தடுத்தப் படங்களின் வெற்றி குறித்தும் தனக்கு கவலை ஏற்பட்டுள்ளதாக அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











