மோசமான போஸ்டர்.. மகன் கேட்ட கேள்வி.. வேதனை அடைந்த நடிகை அர்ச்சனா!
சென்னை: அந்த படத்தின் போஸ்டரைப் பார்த்து மகன் கேட்ட கேள்வியால் மிகவும் வேதனை அடைந்ததாக நடிகை அர்ச்சனா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அழகான க்யூட் நடிகை அர்ச்சனா மாரியப்பன் சீரியல், சினிமா என இரண்டு தளங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இழுத்து போர்த்திக்கொண்டு நடித்து வரும் இவர், இணையத்தில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
நடிகை அர்ச்சனா மாரியப்பன்: கொழுக்கு மொழுக்கு நடிகையான அர்ச்சனா மாரியப்பன் நடிகர் சிம்புவின் வாலு திரைப்படத்தில் கவுன்சலரின் மனைவியாக நடித்திருந்தார். இதையடுத்து, நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களிலும் நடித்துள்ள அர்ச்சனா மாரியப்பன், சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

மகன் கேட்ட கேள்வி: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அர்ச்சனா, மணமகன் தேவை என்ற விவகாரமான படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்ன போது வேறு விதமாக சொன்னார். ஆனால், படம் எடுத்தது, என் கதாபாத்திர வடிவமைப்பு எல்லாம் வேறு மாதிரியாக இருந்தது. இந்த படத்தின் போஸ்டரை என் மகன் பார்த்துவிட்டு, அம்மா இது நீதானே? என்று என்னிடம் கேட்டான். அந்த நேரத்தில் எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது.
வெட்கப்படுகிறேன்: இதுகுறித்து, அப்போதே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். இந்த பிரச்சனையை பெரிது படுத்தினால், நீங்களே அந்த படத்திற்கு விளம்பரம் தேடி தருவது போல் ஆகிவிடும், இதனை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அந்த படத்தில் நடித்தது நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன் என்று அர்ச்சனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அட்ஜஸ்மெண்ட்: மேலும், அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் குறித்த பேசிய, அர்ச்சனா, ஆடிஷனுக்கு வருமாறு ஒரு பெரிய இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது. நர்ஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்து, பேண்டை தூக்க சொன்னார். உடனே நான் சுதாரித்துக்கொண்டு நாளை காஸ்டியூம் போட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











