Indian 2: ரசிகர்களின் விமர்சனங்களை ஏற்ற இந்தியன் 2 டீம்.. 20 நிமிடங்கள் குறைக்க அதிரடி முடிவு!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 திரைப்படத்தினை எடுக்க உள்ளதாக கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பு வந்தது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவதில் பிரச்னைகள் வந்த வண்ணம் இருந்தது. அதன் பின்னர் ஒரு வழியாக படம் நேற்று அதாவது ஜூலை 12ஆம் தேதி வெளியானது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களைக் கொடுத்தனர்.

குறிப்பாக படத்தின் நீளம் குறித்து பலபேர் கருத்து தெரிவித்திருந்தனர். படத்திற்கு தேவையற்ற வசனங்கள், தேவையற்ற காட்சிகள் என பல இடம் பெற்றிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை படக்குழு கொடுத்திருந்ததால், படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

Indian 2 Kamal Haasan 2

ரசிகர்கள் கருத்து: ஆனால் முதல் நாளில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தொடங்கி இரண்டாவது நாளான இன்று வரை படம் பார்த்த ரசிகர்கள் வரை பலரும் குறிப்பிட்டது படத்தின் நீளம் தான். இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் சோர்வாக இருப்பதாக தெரிவித்திருந்தனர். படம் பார்த்த சினிமா விமர்சகர்களும் இதையே தெரிவித்திருந்தனர். படம் மொத்தம் மூன்று மணி நேரம் ஓடுகின்றது.

பில்டப்: சமீப காலமாக மிகப்பெரிய படங்கள் என பில்டப் கொடுக்கப்படும் படங்களில் பெரும்பாலானவை மூன்று மணி நேரம் ரன்னிங் டைமாக உள்ளது. இதனால் இந்தியன் 2 படமும் அந்த வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டது என பல விமர்சகர்களும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் நீளத்தினைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian 2 Kamal Haasan 2

அதிரடி முடிவு: அதன்படி படத்தில் இருந்து 20 நிமிடங்களை ட்ரிம் செய்துவிட்டு, படத்தினை 2 மணி 40 நிமிடங்களுக்கு திரையிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முடிவினை இந்தியன் 2 படத்தின் தெலுங்கு பதிப்பான பாரதியடு 2 படத்தின் டிஸ்டிபூட்டர்ஸ் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டதால் படக்குழு இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த முடிவினை தமிழ் மற்றும் இந்தி பதிப்பிலும் நடைமுறைப்படத்தவும் படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.

Indian 2 Kamal Haasan 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X