சிறப்பு அழைப்பு விடுத்து ஆளுநரை - தான் நடித்த திரைப்படத்தை காண அழைத்தார் சிரஞ்சீவி
Recommended Video
தெலுங்கானா : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த சயீரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவான தேசபக்தி திரைப்படமாகும். ஏராளமான திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சயீரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று சிரஞ்சீவி அவர்கள் தெலுங்கானாவின் ஆளுநராக பதவியேற்றுள்ள தமிழிசை சௌந்தராஜன் அவர்களை நேரில் சந்தித்து வரவேற்றுள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களை சனிக்கிழமை சந்தித்த மெகாஸ்டார் சிரஞ்சீவி அவருக்கு பொன்னாடையும், மலர்க்கொத்தும் கொடுத்து மரியாதை செலுத்தினர். பிறகு தனது தசரா வாழ்த்தினை தெரிவித்தார். பிறகு சமீபத்தில் அவர் நடித்து வெளியான சயீரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தை ஆளுநர் அவர்கள் பார்க்க வேண்டும் என்று வேண்டி கேட்டு கொண்டார். மேலும் இன்றைய தலைமுறையினருக்கு தேசபக்தியை பரப்புமாறு கேட்டுக்கொண்டார் சிரஞ்சீவி. அதற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் கூடிய விரைவில் படத்தை பார்ப்பேன் என்று உறுதியளித்தார்.
வெளியாகி மூன்றே நாட்களில் மூன்று கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது சயீரா நரசிம்மா ரெட்டி திரைப்படம். பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்டு பரபரப்பை ஏற்படுத்திவருகிறது சயீரா. தசரா விடுமுறை என்பதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கணித்துள்ளனர் ஆய்வாளர்கள். குடும்பத்துடன் சென்று ரசிக்க கூடிய ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது சயீரா.
பல மொழிகளில் ரிலீஸ் ஆன பிரமாண்ட திரைப்படம் தான் சயீரா . சிரஞ்சீவி முதல் முறையாக ஹிஸ்டாரிகல் சப்ஜெக்ட் செய்கிறார். தன் மகன் ராம் சரண் தயாரிப்பில் - நடிப்பதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் கருதுகிறார். பொதுவாக சினிமாவில் அப்பாக்கள் தான் மகன் முன்னேற பல முயற்சிகள் செய்வார்கள் . ஆனால் நான் கொடுத்து வைத்தவன் - வித்யாசமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என்று என் மகன் எனக்காக பாடுபடுகிறார். என்று பல மேடைகளில் சொல்லி வருகிறார்.


Click it and Unblock the Notifications











