twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “நான் கோவில்களுக்கு எதிரானவன் இல்லை“..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூரி!

    |

    சென்னை : என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.

    Recommended Video

    Soori Ultimate Comedy Speech | என்ன கொன்னுருப்பானுங்க ! Viruman Press Meet *Kollywood

    முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் வெளியாக உள்ள விருமன் படத்தின் டீசர் வெளியீட்டு மதுரையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த விழாவில் சூர்யா, ஷங்கர், சூரி, யுவன் சங்கர் ராஜா, மைனா நந்தினி, வடிவுக்கரசி, சிங்கம் புலி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் சூரி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    சர்ச்சையான பேச்சு

    சர்ச்சையான பேச்சு

    மதுரை விழாவில் நடிகர் சூரி, நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, ஆயிரம் அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசி இருந்தார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, ஏன் கோவிலை பற்றிய எல்லோரும் பேசுகிறார்கள். மசூதி, சர்ச் பற்றி பேச தைரியம் இல்லையா கண்டனங்கள் எழுந்தன.

    யார் மனதையும் புண்படுத்தவில்லை

    யார் மனதையும் புண்படுத்தவில்லை

    இந்நிலையில் விருமன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஆயிரம் கோவில்கள் கட்டுவதை விட ஏழைகளுக்கு ஒரு கல்வி கொடுப்பது சிறப்பானது என்று சொல்லி இருந்தேன். நான் அதை யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்று அப்படி சொல்லவில்லை.

    நான் கோவில்களுக்கு எதிரானவன் இல்லை

    நான் கோவில்களுக்கு எதிரானவன் இல்லை

    கோவில்களுக்கு எதிரானவன் நான் இல்லை நான் சாமி கும்பிடுபவன் தான். மதுரை மீனாட்சி அம்மனோடு தீவிர பக்தன். எந்த வேலையை தொடங்கினாலும், மீனாட்சி அம்மன் பெயரை சொல்லித்தான் தொடங்குவேன். மதுரையில் உள்ள அனைத்து என்னுடைய ஹோட்டல்களுக்கும் அம்மன் என்று தான் பெயரையே வைத்திருக்கிறேன். அப்படி இருக்கையில் நான் எப்படி கோவில்களை பற்றி தவறாக பேசுவேன். அன்றைக்கு கல்வியை ஒரு சிறப்பான விஷயம் என்று சொல்வதற்காக தான் அப்படிப் பேசினேன். ஆனால் அதை சிலர் தவறாக புரிந்து கொண்டார்கள்.

    எந்த உள்நோக்கமும் இல்லை

    எந்த உள்நோக்கமும் இல்லை

    யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம் நான் எந்த கோவில்களுக்கும் எதிரானவன் அல்ல நான் படிக்காதவன். படிக்காதவன் என்பதாலே நிறைய இடங்களில் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுவதால் மனசு உடைந்து போகிறேன். அதனால் எல்லோரும் நல்லா படிக்கணும் இதை நான் சொல்லவில்லை. அன்று கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மகாகவி பாரதியார் சொன்னார் அதைத்தான் நானும் சொன்னேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். நானும் சாமி கும்பிடுகிறவன் தான். எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. நான் இப்பவும் சொல்றேன் அனைவருக்கும் கல்வி வேண்டும் என பேசினார்.

    English summary
    temple-controversy speech at viruman event.. actor soori explain
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X