ஊர் ஊரா கலக்குதடி லிங்கா லிங்கா – லிங்கா படத்தின் 10 சுவாரசிய தகவல்கள்!

சென்னை: கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள அவரது திரைப்படம் "லிங்கா".

அப்படத்தினைப் பற்றிய பத்து சுவராசியமான உண்மைகள்தான் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளது.

பட்டியலை இங்க படிங்க...படத்தை தியேட்டரில் போய் பாருங்க ரசிகப்பெருமக்களே...

கெமிஸ்ட்ரியோ கெமிஸ்ட்ரி:

கெமிஸ்ட்ரியோ கெமிஸ்ட்ரி:

முதன்முறையாக செம ரொமாண்டிக்காக சோனாக்‌ஷியுடன் நடித்துள்ளார் தலைவர். குழந்தையிலிருந்து ரஜினி பார்த்து வளர்ந்த அவரது நண்பரின் மகளான சோனாக்‌ஷி இன்று அவருடன் திரையில் ரொமான்ஸ் செய்கிறார். ரஜினிக்கு இது சவாலான ஒன்று என்றாலும் திரையில் அழகாகத்தான் வந்துள்ளது.

தரையெல்லாம் தத்ரூப ”செட்கள்”:

தரையெல்லாம் தத்ரூப ”செட்கள்”:

இப்படத்திற்காக கிட்டதட்ட உண்மையான இடங்கள் போன்றே பல்வேறு செட்கள் போடப்பட்டுள்ளன. மிகப்பெரிய பாலம், அரண்மனை, ரயில்வே நிலையம் எல்லாமே செட்கள்தான் என்றால் நம்ப முடியவில்லைதான். அந்த அளவிற்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தத்துக் கொடுத்த அமீர்:

தத்துக் கொடுத்த அமீர்:

இப்படத்தின் தலைப்பான "லிங்கா"வினை ஏற்கனவே இயக்குனர் அமீர் பதிவு செய்து வைத்திருந்தார். ஆனாலும், ரவிகுமார் கேட்டார் என்று ரஜினிக்காக அந்த தலைப்பினை தத்துக் கொடுத்துவிட்டார் அமீர்.

சோனாக்‌ஷிக்கு வெல்கம்:

சோனாக்‌ஷிக்கு வெல்கம்:

லிங்காதான் சோனாக்‌ஷி சின்காவிற்கு தென் இந்தியாவில் முதல் படம். பாலிவுட்டில் கலக்கி வரும் சோனாக்‌ஷி, கோலிவுட்டிலும் கலக்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது. அதனால் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றார் சோனாக்‌ஷி.

மோனா மோனா கேஸோலீனா:

மோனா மோனா கேஸோலீனா:

லிங்கா படத்தில் பிரபலமான மோனா மோனா கேஸோலீனா பாடலில் மூன்று வெவ்வேறு வேடங்களில் திரையில் தோன்றியுள்ளனர் ரஜினியும், அனுஷ்காவும். டாம் குரூஸ், ஜாக் ஸ்பாரர், ராபின் ஹூட் வேடங்களில் அசத்தியுள்ளார் ரஜினி.

பிறந்தநாள் “டீரிட்”:

பிறந்தநாள் “டீரிட்”:

ரஜினிகாந்தின் 64 ஆவது பிறந்தநாளின் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் கிப்டாக இந்த படம் வெளியாகியுள்ளது.

பேரனோட பேரும் இதான்:

பேரனோட பேரும் இதான்:

ரஜினிகாந்தின் பெரிய மகள் ஐஸ்வர்யா - தனுஷ் ஜோடியின் மகன் பெயரும் லிங்காதான். பேரனின் பெயரில் தாத்தா நடித்திருக்கும் ஸ்வீட் படமாக வெளிவந்துள்ளது "லிங்கா".

தலைவா நீ கிரேட்:

தலைவா நீ கிரேட்:

இந்த படத்திற்கான டப்பிங்கினை கிட்டதட்ட 24 மணி நேரத்திற்குள் முடித்துக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

சோனக்‌ஷிக்கு குரல் கொடுத்தவர்:

சோனக்‌ஷிக்கு குரல் கொடுத்தவர்:

பிரபல பிண்ணனி பாடகியான சின்மயிதான் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பிற்கு சோனாக்‌ஷிக்கு குரல் கொடுத்துள்ளார். தமிழ் படத்தில் நடித்திருந்தாலும், சோனாக்‌ஷிக்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக ராப் மியூசிக் கலக்கல்:

முதன்முறையாக ராப் மியூசிக் கலக்கல்:

ரஜினிகாந்த் இப்படத்தில் முதல் முறையாக பாடல் காட்சியில் ராப் மியூசிக்கிற்கு நடித்துள்ளார். அந்த ராப் பகுதியினை ஆர்யன் தினேஷ் கனகரத்னம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X