சின்னத்திரையில் மீண்டும் வலம் வர தயாராகும் நடிகை நீபா
சென்னை : நடன இயக்குனரும், நடிகையுமான நீபா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க போவதாக கூறியுள்ளார்.
நீபா என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது காவலன் பட பூங்கொடி தான். அந்த படத்தில் வடிவேல் மற்றும் விஜயுடன் அவர் செய்த காமெடிகளை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டோம். திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் ஒதுங்கி, இல்லற வாழ்விலே கவனம் செலுத்தி வந்த நீபா தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க போவதாய் கூறியுள்ளார் .

நடிகை மற்றும் நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் நீபா பணிபுரிந்து இருக்கிறார். இவரது பெயர் சண்முக ப்ரியா ஆகும் நடிக்க துவங்கிய போது தனது பெயரினை நீபா என்று மாற்றி வைத்து கொண்டார். இவர் அம்மா மாலினி மற்றும் அப்பா வாமனன் இருவருமே நடன இயக்குனர்கள். சிறுவயதில் இருந்து நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் தனது 14 வயதிலே படங்களில் நடன இயக்குனராய் பணியாற்ற துவங்கினார் .
இவர் சில படங்கள் மற்றும் நாடகங்ளில் நடித்து இருக்கிறார் .தமிழில் பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா, அம்முவாகிய நான், கண்ணும் கண்ணும், காவலன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் .இவர் கல்யாணத்திற்கு பின்பு படங்களில் ஏதும் நடிக்கவில்லை நீண்ட நாட்கள் இல்லற வாழ்விலே ஈடுபட்டு வந்த நீபா தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு நெடுந்தொடரில் நடிக்க உள்ளார் இதனையடுத்து சமீபத்தில் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் அதில் பல விசயங்களையும் பகிர்ந்து உள்ளார் .
அதில் ஒரு பேட்டியில் தான் 14வயதில் புதிய கீதை படத்தின் ஒரு பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளேன் என்றார். அதில் மீரா ஜாஸ்மீன் தன்னை அன்போடு பார்த்து கொண்டு அவரது அறையிலே படுக்க வைத்து கொண்டதாகவும் கூறினார் .மேலும் விஜய் தன்னுடன் மிக அன்பாக பழகினார், நான் விஜயுடன் ஓடி பிடித்து விளையாடியதாகவும் கூறியுள்ளார். அப்போது விஜய் எனக்கு இனிப்புகள் எல்லாம் வாங்கி தந்ததாகவும் நீபா கூறினார்.
மேலும், அதன் பின் பத்து வருடங்கள் கழித்து நான் காவலன் படத்தில் மீண்டும் விஜயை சந்தித்த போது தன்னை மறக்காமல் நன்கு நியாபகம் வைத்திருந்த விஜய் .என்ன உன் பேரு ப்ரியா தானா ஏன் நீபானு பேர மாத்தி வச்சுருக்கனு கேட்டது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தாக இருந்தது என்று கூறினார். பத்து வருட இடைவெளியில் விஜயை நான் சந்தித்ததே இல்லை ஆனாலும் விஜய் தன்னை சரியாக நியாபகம் வைத்து பேசியது மிக மகிழ்ச்சியான விசயம் என்று கூறினார் .
தற்போது நீபா மீண்டும் நடிக்க போவதாக கூறியிருக்கிறார். தனது கணவன் முதலில் இதற்கு சம்மதிக்க வில்லை நானும் நடிப்பு வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போது எல்லோரும் கேட்கிறார்கள் ஏன் இவர் நடிக்கவில்லை நடிக்கவில்லை என்று அதனால் சரி என்று தற்போது நான் மீண்டும் நடிக்க வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் நீபா.


Click it and Unblock the Notifications











