கருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்

மெல்லிய கருப்பு உடை... கலக்கலான வெட்கப்புன்னகை சிந்தும் ஹன்சிகாவின் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெனாலிராமகிருஷ்ணா பிஏபிஎல் தெலுங்கு படத்தின் டீசர் வெளியீடு விழாவிற்கு வந்த ஹன்சிகாவின் அழகை போட்டோகிராபர் சுட்டுத்தள்ள அப்போது வெட்கத்தில் முகம் சிவந்த ஹன்சிகாதான் பல போஸ்களில் ரசிக்க வைக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா. மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார். பப்ளியாக தமிழில் அறிமுகமான ஹன்சிகாவை சின்னக்குஷ்பு என்று கொண்டாடினர் ரசிகர்கள். சுந்தர். சியும் தனது படங்களில் ஹன்சிகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

பப்ளியான உடலை குறைத்து ஒல்லியானார். இதையடுத்து சினிமா வாய்ப்பு கிடைக்காமல், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் மியாமி கடற்கரைக்கு சென்ற ஹன்சிகா அங்கு கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது. ஹன்சிகா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகினது.

கவர்ச்சியும் அழகும் இருந்தாலும் ஹன்சிகா ஒன்றும் பெரிய அளவில் ஹிட் படங்களில் நடிக்கவில்லை. நயன்தாரா, திரிஷாவின் நடிப்பு, கவர்ச்சிக்கு முன்பாக ஹன்சிகாவின் கிளாமர் எடுபடவில்லை. எடையை குறைத்தும் ஹன்சிகா தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஜொலிக்கவில்லை.

தெலுங்கு படத்தில்

தெலுங்கு படத்தில்

தமிழில் வாய்ப்புகள் இல்லாத ஹன்சிகா தெலுங்கு பக்கம் போனார். அங்கே சந்தீப் கிஷனுடன் தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் ஹன்சிகா. அதற்கான டீசர் வெளியீடு இரு தினங்களுக்கு முன்பு நடந்தது.

கலக்கல் ஹன்சிகா

கலக்கல் ஹன்சிகா

டீசர் வெளியீட்டு விழாவிற்காக வந்த ஹன்சிகா கலக்கலான கருப்பு உடையில் வந்தார். அப்போது அவரது அழகைப் பார்த்த புகைப்பட கலைஞர் சுட்டுத்தள்ளினார். வெட்கத்தில் முகம் சிவந்தார் ஹன்சிகா.

வெட்கப்புன்னகை

வெட்கப்புன்னகை

தலை கவிழ்ந்து கண்கள் மூடி அவர் சிந்திய புன்னகை அசத்தலாக இருந்தது. டார்க் மேக் அப் போட்ட ஹன்சிகா ஒல்லி பெல்லி உடம்பில் இருக்கிறார். அவர் பப்ளியாக இருந்த போது முகத்தில் இருந்த தேஜஸ் இப்போது மிஸ்ஸிங். இருந்தாலும் ஹன்சிகாவின் புகைப்படங்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.

மஞ்சள் தேவதை

மஞ்சள் தேவதை

சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் நிற தேவதையாக எடுத்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஹன்சிகா. இப்போது கருப்பு தேவதையாக ஜொலிக்கிறார். கருப்பு தேவதையாக வலம் வந்த ஹன்சிகாவின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வலம் வருகின்றன.

பிகினி வைரல்

பிகினி வைரல்

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த ஹன்சிகா கடற்கரையில் பிகினியில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதிர்பாராத விதமாக வைரலானது. ஹன்சிகாதான் வேண்டும் என்றே அதை வெளிவிட்டதாக கூறினர். சினிமா வாய்ப்புக்காக அவ்வாறு செய்வதாக தெரிவித்தனர். ஆனால் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார் ஹன்சிகா.

More from Filmibeat

Read more about: hansika ஹன்சிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X