தமிழில் வெளியானது டெனெட்.. இந்திய ரசிகர்களுக்கு கிறிஸ்டோபர் நோலன் ஸ்பெஷல் மெசேஜ்!

சென்னை: இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட திரைப்படமான டெனெட் இந்தியாவில் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள ஐமாக்ஸ் திரையரங்குகளில் பல்வேறு மொழிகளில் வார்னர் பிராஸ் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்பட்ட அனுபவங்களை இந்திய ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோ மெசேஜ் மூலமாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் வெளியிட்டுள்ளார்.

குழப்பும் டெனெட்

குழப்பும் டெனெட்

வித்தியாசமான திரைக்கதைகளை படமாக இயக்குவதில், ஜகஜால கில்லாடியான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள டெனெட் திரைப்படம் அவரது முந்தைய படைப்புகளான மெமென்டோ, இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லார் போன்றே புரியாத புதிராக உருவாகி உள்ளது.

இந்திய மொழிகளில்

இந்திய மொழிகளில்

தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியான நிலையில், இன்னமும் தியேட்டருக்கு சென்று மக்கள் படங்களை பெரிய அளவில் பார்த்து ரசிக்க தயாராகவில்லை. இந்திய ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் முயற்சியாக பிரம்மாண்ட திரைப்படமான டெனெட் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இன்று இந்தியாவில் ரிலீசாகி உள்ளது.

சிறப்புத் தோற்றம்

சிறப்புத் தோற்றம்

கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்தில் ஹீரோவாக ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பாட்டின்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியரான டிம்பிள் கபாடியா பிரியா எனும் கதாபாத்திரத்திலே நடித்துள்ளார். இந்தியாவில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டும் இந்தியரான டிம்பிள் கபாடியாவுக்கு இந்த படத்தில் அதிக முக்கியத்துவத்தையும் நோலன் கொடுத்துள்ளார்.

நோலனின் வீடியோ மெசேஜ்

இந்தியாவில் டெனெட் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அதனை முன்னிட்டு இந்திய ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் வீடியோ மெசேஜை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான முக்கிய காட்சிகள் மும்பையில் தான் படமாக்கப்பட்டது என்றும், மும்பை ஒரு தனித்துவம் வாய்ந்த நகரம் என்றும், இந்தியர்களுக்கு டெனெட் நிச்சயம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X