Leo: டெனட் படத்தில் நடித்த நடிகரையே களமிறக்கிய லோகேஷ் கனகராஜ்.. விஜய்க்கு இது வெயிட்டான படம் தான்!
சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் அடுத்த மைல்கல்லை எட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
விஜய்யின் லியோ படத்தில் வரிசையாக பல வெயிட்டான நடிகர்களை போட்டு விட்டாலே படம் வேறலெவலில் வந்து விடும் என பக்கா ஸ்கெட்ச் போட்டு பல பிரபலங்களை இணைத்துக் கொண்டே வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்து இறக்கி உள்ள பிரம்மாஸ்திரம் தான் டெனட் பட நடிகர் என்கின்றனர்.

அக்டோபர் மாதம் வெளியாக உள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் ஆகி உள்ள நிலையில், இன்னொரு ஆன்போர்டா என்றும் கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்துள்ளது.
எல்லாமே டான்கள்: நடிகர் விஜய் மட்டுமின்றி லியோ படத்தில் இணைந்துள்ள பல நடிகர்களும் சினிமாவில் தங்களுக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டவர்களாக உள்ளனர். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி, த்ரிஷா, மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் லியோ படத்தில் உள்ளனர்.
மேலும், விக்ரம் படத்தில் நடித்த பகத் ஃபாசில் உள்ளிட்ட சிலரும் இந்த படத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெனட் பட நடிகர்: பாலிவுட் நடிகரான டென்சில் ஸ்மித் தான் தற்போது தளபதி விஜய்யின் லியோ படத்தில் இணைந்துள்ளதாக லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. 4 நாட்கள் அவர் லியோ படத்தில் நடித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
டெல்லி கிரைம் உள்ளிட்ட பிரபல இந்தி படைப்புகளில் நடித்துள்ள டென்சில் ஸ்மித் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனட் படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், லியோ படத்திலும் வெயிட்டான ரோலில் நடித்து வருவதாக கூறுகின்றனர்.

சர்வதேச டான்: டென்சில் ஸ்மித் சர்வதேச டானாகவோ அல்லது காவல்துறை உயர் அதிகாரியாகவோ இந்த படத்தில் நடித்து வரலாம் என கணிப்புகளும் வெளியாகி உள்ளன.
ஆக்ஷன் காட்சிகளில் இதுவரை விஜய் படங்களில் இல்லாத அளவுக்கு ஸ்டன்ட்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பர்த்டே ட்ரீட்: ஆதித்யா ராம் ஃபிலிம் சிட்டியில் லியோ படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் க்ளிம்ஸ் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தனது ரசிகர்களை கண்டிப்பாக பிறந்தநாள் அன்று விஜய் ஏமாற்ற மாட்டார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











