நடிகையுடன் டேட்டிங் போகும் பிரபல டென்னிஸ் வீரர்... இணையத்தில் லீக்கான கோவா டூர் போட்டோஸ்!

சென்னை: பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் பிரபல நடிகையுடன் டேட்டிங் சென்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளையாட்டு வீரர்கள் பாலிவுட் நடிகைகளுடன் டேட்டிங் செல்வது ஒன்றும் புதிதல்ல.

கிரிக்கெட் வீரர்கள் பலர் பாலிவுட் நடிகைகளுடன் காதல் உறவில் இருந்து திருமண உறவில் இணைந்துள்ளனர்.

பட்டியலில் இணைந்த புதிய ஜோடி

பட்டியலில் இணைந்த புதிய ஜோடி

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி சினிமாவிலும் விளையாட்டுத் துறையை சேர்ந்த நட்சத்திரங்களும் சினிமாத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த பட்டியலில் தற்போது புதிதாக ஒரு ஜோடி இணைந்துள்ளது.

லியாண்டர் பயஸ் - கிம் ஷர்மா

லியாண்டர் பயஸ் - கிம் ஷர்மா

அதாவது, டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸும் பாலிவுட் நடிகையான கிம் ஷர்மாவும் டேட்டிங்கில் உள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் இருவரும் கோவா ரிசார்ட்டில் ஒன்றாக ஓய்வை கழிக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

ஒன்றாக ஓய்வை கழிப்பது முதல் முறை

ஒன்றாக ஓய்வை கழிப்பது முதல் முறை

லியாண்டர் பயஸும் கிம் ஷர்மாவும் ஒன்றாக கேமரா கண்களில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் இருவரும் ஒன்றாக சுற்றிய போட்டோக்கள் இணையத்தில் வெளியானது. இருப்பினும் அவர்கள் இருவரும் ஒன்றாக தங்கி ஓய்வை கழிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

பின்னால் இருந்து கட்டியணைத்து

பின்னால் இருந்து கட்டியணைத்து

கோவாவில் உள்ள பவுசடா பீச்சில் உள்ள ரெசார்ட்டில் தங்கியுள்ள அவர்கள் அங்குள்ள ரெஸ்டாரண்டில் நேரத்தை கழித்தனர். அப்போது லியாண்டர் பயஸ், கிம் ஷர்மாவை பின்னால் இருந்து கட்டியணைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ பவுசாடா பீச்சின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

மேலும் அவர்கள் இருவரும் அந்த ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போட்டோக்களும் வெளியிடப்பட்டுள்ளது அதில் கோவா ஸ்பெஷல் சீ ஃபுட்டுகளை ருசி பார்க்கின்றனர் இருவரும். இந்த போட்டோவில் இருவரும் நெருக்கமாக அமர்ந்து ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து போஸ் கொடுத்துள்ளனர்.

வெள்ளை சட்டை மற்றும் டெனிம் ஷார்ட்ஸ்

வெள்ளை சட்டை மற்றும் டெனிம் ஷார்ட்ஸ்

இதேபோல் நடிகை கிம் ஷர்மாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவும் அதே நாளில் எடுக்கப்பட்டது என தெரிகிறது. இந்த போட்டோவிலும் வெள்ளை சட்டை மற்றும் டெனிம் ஷார்ட்ஸை அணிந்துள்ளார் கிம் ஷர்மா.

கிம் ஷர்மா கேப்ஷன் Mr P

கிம் ஷர்மா கேப்ஷன் Mr P

இதில் ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை தலையிலும் வைத்து பீச்சில் நின்று சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் கிம் ஷர்மா. மேலும் அந்த போட்டோவுக்கு #mood என்ற கேப்ஷன் கொடுத்துள்ள கிம் ஷர்மா, Mr P என்றும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் லியாண்டர் பயஸா என கேட்டு வருகின்றனர்.

லைக்ஸ்களை குவிக்கும் போட்டோ

லைக்ஸ்களை குவிக்கும் போட்டோ

மேலும் உங்களை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்ப்பது சந்தோஷம் என்றும் கூறியுள்ளனர் நெட்டிசன்கள். பலரும் க்யூட், பியூட்டிஃபுல் டால் என கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். கிம் ஷர்மாவின் இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

கிம் ஷர்மா நடிகருடன் டேட்டிங்

கிம் ஷர்மா நடிகருடன் டேட்டிங்

லியாண்டர் பயஸ் மாடல் ரியா பிள்ளையுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ரியா பிள்ளையுடன் லியாண்டர் பயஸ் ஒரு மகளை பெற்றார். அவருக்கு அய்னா என்று பெயரிடப்பட்டது. நடிகை கிம் ஷர்மா முன்பு நடிகர் ஹர்ஷவர்தன் ரானேவுடன் டேட்டிங்கில் இருந்தார்.

பாலிவுட் படங்கள் மற்றும் மாடலிங்

பாலிவுட் படங்கள் மற்றும் மாடலிங்

கிம் ஷர்மா 2000 ஆம் ஆண்டில் ஷாருக்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த மொஹபத்தேன் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவர் அடுத்ததாக ஃபிடா மற்றும் தாஜ்மஹால்: ஒரு நித்திய காதல் கதை படத்தில் நடித்தார். தொடர்ந்து பாலிவுட் படங்கள் மற்றும் மாடலிங் என பிஸியாக இருந்து வருகிறார் கிம் ஷர்மா.

Recommended Video

FROM MEDICAL BUSINESS TO CINEMA ACTING |CLOSE CALL WITH ACTOR MATHEW VARGHESE | FILMIBEAT TAMIL
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் படத்தில் பயஸ்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் படத்தில் பயஸ்

லியாண்டர் பயஸ் ஒரு புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஆவார், அவர் விரைவில் OTT திட்டத்திற்காக மற்றொரு டென்னிஸ் நட்சத்திரமான மகேஷ் பூபதியுடன் மீண்டும் இணைகிறார். அவர் 2013 ஆம் ஆண்டு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்தார். அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X