Tere Ishk Mein Box Office: தமிழ்நாட்டில் டிட்வா வாஷ்.. இந்தியில் செவ்வாய்க்கிழமையும் சிவ தாண்டவம் ஆடும் தனுஷ்!
சென்னை: குபேரா, இட்லி கடை படங்களை தொடர்ந்து தேரே இஷ்க் மே திரைப்படமும் தமிழ்நாட்டில் தனுஷுக்கு பெரிதாக ஓடவில்லை. ராஞ்சனா படத்தை அம்பிகாபதி என தமிழில் தலைப்பு வைத்து ரிலீஸ் செய்து இங்கேயுள்ள ரசிகர்களையும் "பார்க்காதே ஒரு மாதிரி" என ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை பார்க்க வைத்து ஜோயா மீது பித்து பிடிக்க வைத்திருந்தது ராஞ்சனா.
ஆனால், தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக கடந்த வாரம் வெளியான கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா மற்றும் தனுஷின் தேரே இஷ்க் மே உள்ளிட்ட படங்கள் க்ளீன் போல்டாகி விட்டதாகவே கூறுகின்றனர்.

அதை முன்கூட்டியே கணித்து தான் தனுஷ் இந்த முறை பாலிவுட்டை மட்டுமே ஃபோகஸ் செய்வோம் என அங்கேயே தொடர்ந்து கிருத்தி சனோன் உடன் ஜோடி போட்டு புரொமோஷன் செய்து வருகிறார். அவரது கணிப்பும் வீண் போகவில்லை. திங்கட்கிழமையை விட செவ்வாய்க்கிழமை வசூல் அதிகரித்து பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை சர்ப்ரைஸ் ஆக்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் தள்ளாடும் தனுஷ் படங்கள்: இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான குபேரா திரைப்படம் தெலுங்கில் வெற்றிப் பெற்ற நிலையில், தமிழில் பெரிதாக வசூல் செய்யவில்லை. தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் தமிழ்நாட்டில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸை எட்ட முடியாமல் தவித்தது. அதிகபட்சமாக வெறும் 71 கோடி வசூல் மட்டுமே உலகளவில் இட்லி கடை ஈட்டியது என சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களிலும் தலா 75 லட்சம் வசூல் செய்த தனுஷ் படம் திங்கட்கிழமை வெறும் 5 லட்சமாக குறைந்தது. செவ்வாய்க்கிழமை அதைவிட குறைந்துவிட்டதாம். தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை தான் இதற்கு காரணம் என்கின்றனர்.
இட்லி கடையை 5 நாட்களில் முந்திய தேரே இஷ்க் மே: இந்தியளவில் வெறும் இந்தி மொழியிலேயே தனுஷின் தேரே இஷ்க் மே இசைப்புயலின் காதல் பாடல்களுடன் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இட்லி கடை படத்தின் லைஃப் டைம் உலக வசூலை வெறும் 5 நாட்களில் இந்தியளவிலேயே முந்திவிட்டது தேரே இஷ்க் மே என சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது.

தனுஷின் சிவ தாண்டவம்: தேரே இஷ்க் மே படத்தில் ராஞ்சனா கனெக்ஷனையும் சங்கருக்கே முக்தி கிடைக்காது என ஆன்மிக டச்சையும் சரியாக வைத்து வாரணாசியில் படத்தை தூக்கி நிறுத்திவிட்டார் இயக்குநர் ஆனந்த் எல். ராய். அதன் காரணமாக செவ்வாய்க்கிழமையான நேற்று 10.25 கோடிக்கும் மேல் தேரே இஷ்க் மே வசூல் ஈட்டியிருக்கிறது. திங்கட்கிழமையே 8.75 கோடி மட்டுமே வசூல் செய்த தனுஷ் படம் நேற்று அதிகரித்தது பாலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியளவில் 71 கோடியும் உலகளவில் 85 கோடி வசூலை இந்த படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் 100 கோடி கிளப்பில் இந்த படம் இணையப் போவது உறுதியாகி உள்ளது. 200 கோடி வசூலை குறி வைக்குமா? அல்லது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் வசூலான 150 கோடி வசூலை தனுஷ் இந்தி படத்தின் மூலம் கடப்பாரா? என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











