Tere Ishk Mein Day 2 Official Box Office: போடு வெடிய.. பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் தனுஷ்

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 28ஆம் தேதி வெளியான படம் தேரே இஷ்க் மே. இந்த படத்தை ராஞ்சனா படத்தை எழுதி இயக்கிய ஆனந்த் எல். ராய் இயக்கி உள்ளார். படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். காதல், ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி உள்ளது, தேரே இஷ்க் மே. இப்படம் நேரடி இந்திப் படம் என்பதால் தமிழில் கணிசமான வரவேற்புதான் கிடைத்துள்ளது. படம் முதல் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என சகலகலா வல்லவனாக வலம் வரும் தனுஷ், தமிழ் சினிமா உலகைக் கடந்து இந்தி மற்றும் தெலுங்கில் நேரடிப் படங்களில் நடித்து தனக்கென மார்க்கெட்டை உருவாக்கி வருகிறார். இவரது இட்லி கடை படத்துக்கு முன்னர் வெளியான குபேரா படம், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான நேரடி தெலுங்கு படம். இப்படி இருக்கும்போது இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகி உள்ள மூன்றாவது படம் தேரே இஷ்க் மே.

Tere Ishk Mein Day 2 Official Box Office Detailas Shared By Dhanush Which is Crossed 31 Crores
Photo Credit:

நல்ல வரவேற்பு: குபேரா, இட்லி கடை உள்ளிட்ட படங்கள் ஓரளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் ஸ்கோர் செய்தது. ஓடிடி பிசினஸ் இருந்ததால் படம் வணிக ரீதியாக ஓ.கே.வான வெற்றியை எட்டிய படமாக மாறிவிட்டது. இப்படி இருக்கும்போது, நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டார்கிராம் பக்கத்தில், தேரே இஷ்க் மே படத்தின் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை வெளியிட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வசூல்: அதாவது படம் முதல் நாளில் ரூபாய் 15.06 கோடிகளும் இரண்டாவது நாளில் ரூபாய் 16.57 கோடிகளும் என மொத்தம் இரண்டு நாட்களில் ரூபாய் 31.63 கோடிகள் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இந்தியாவில் அதுவும் இந்தியில் படம் திரையிடப்பட்ட காட்சிகளில் மட்டுமான வசூல் என்று தெரிவித்துள்ளனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் டாக் இருப்பதால், படம் இன்று ரூபாய் 50 கோடிகள் வசூலை எட்டிவிடும், மொத்தத்தில் ரூபாய் 100 கோடிகள் வசூலை அள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது. தனுஷ்க்கு இந்த வசூல் கணக்கு என்பது, மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X