Tere Ishk Mein Day 3 Box Office - தனுஷின் தேரே இஷ்க் மே 3வது நாள் வசூல் தெரியுமா?.. படிப்படியா உயருதே
சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் தேரே இஷ்க் மே திரைப்படம் வட மாநிலங்களில் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடி வாங்கியிருக்கிறது. இந்நிலையில் அப்படம் வெளியாகி மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த விவரத்தை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கும் தனுஷ் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே ஆனந்த்தும் தனுஷும் சேர்ந்து ராஞ்சனா படத்தை கொடுத்து சக்சஸ்ஃபுல் கூட்டணி என்று பெயர் எடுத்திருந்ததால் இதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.
ரிலீஸான படம்: படமானது கடந்த 28ஆம் தேதி ரிலீஸானது. தமிழ்நாட்டில் படத்துக்கான ப்ரோமோஷன்களை படக்குழு ஒழுங்காக செய்யவில்லை என்ற பேச்சுக்கள் பலமாகவே ஓடின. அதற்கு காரணம் தெலுங்கு, தமிழில் உருவான குபேரா படத்துக்கு ப்ரோமோஷன் செய்தும் சரியான ரெஸ்பான்ஸை பெறவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டை படக்குழு கண்டுகொள்ளவில்லை என்றும் கருதப்படுகிறது.

சுமாரான வரவேற்புதான்: படம் பார்த்த ரசிகர்களுக்கு முழு திருப்தி கிடைக்கவில்லை. தனுஷின் நடிப்பு வழக்கம்போல் சிறப்பாக இருந்தாலும் இயக்குநர் கோட்டைவிட்டுவிட்டார். பழைய காலத்து கதையை எடுத்திருக்கும் இயக்குநர் இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு பட்டி டிங்கரிங் செய்யாமல் எடுத்து வைத்து அதிர்ச்சியைத்தான் கொடுத்திருந்தார். இதனால் படம் பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியை அடைந்தார்கள்.
தமிழ்நாட்டில் சுத்தம்: தமிழ்நாட்டில் படம் சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. அதேசமயம் ஹிந்தியில் படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கின்றன. நேற்றுகூட புனேவில் தனுஷ், கீர்த்தி, ஆனந்த் எல்.ராய் ஆகியோர் தியேட்டர் விசிட் செய்திருந்தார்கள். அப்போது அந்தத் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆகியிருந்தது. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் செமயாக ட்ரெண்டாகியிருந்தது.
வசூல் விவரம்: இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி மூன்றாவது நாளான நேற்று இப்படம் 18.75 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். மொத்தம் 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் தேரே இஷ்க் மே 51 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக அந்த தளம் குறிப்பிட்டிருக்கிறது. முதல் நாளில் 16 கோடி ரூபாயை வசூலித்து அடுத்தடுத்த நாட்களில் முறையே 17 கோடி, 18.75 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











