Tere Ishk Mein First Review: தனுஷ்க்கு பெரிய வெற்றி இருக்கு.. தேரே இஷ்க் மே முதல் விமர்சனம்!

மும்பை: தேரே இஷ்க் மே, தனுஷ் கதாநாயகனாக நடிக்க, கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்து உருவாகியுள்ள படம் தேரே இஷ்க் மெய்ன்.இயக்குநர் ஆனந்த் எல். ராய் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆனந்த் எல். ராய், ஹிமான்ஷு ஷர்மா, பூஷண் குமார், மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படம் வரும் 28ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முதற்கட்ட விமர்சனங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிருத்தி சனோனுக்கு இந்த ஆண்டின் முதல் படமாக வெளியாகும் 'தேரே இஷ்க் மெரெ', வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் முதல் முறையாக இணையும் இந்தப் படத்தில், இவர்களது புத்தம் புதிய ஜோடி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் 'ராஞ்சனா' படத்தின் தொடர்ச்சியாக இந்த 'தேரே இஷ்க் மே' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாளை மறுநாள் அதாவது, நவம்பர் 28 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் ஆரம்பகட்ட விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. கிருத்தி சனோன் ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்திகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு வெளியான 'தோ பட்டி' திரைப்படத்திற்குப் பிறகு, கிருத்தி சனோனின் இந்த வருடத்தின் முதல் வெளியீடாக 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

விமர்சனம்: ட்விட்டரில் தன்னை விமர்சகராக அறிவித்துக் கொண்ட உமைர் சந்து, 'தேரே இஷ்க் மே' ஒரு அற்புதமான திரைப்படம் என்று புகழ்ந்துள்ளார். இது 2025 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுபூர்வமான காதல் கதை என்றும், பலமுறை சிலிர்க்க வைக்கும் காட்சிகள் நிறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tere Ishk Mein First Review Kriti Sanon s Upcoming Film With Dhanush

சிறந்த நடிப்பு: படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் படத்திற்கு உயிர் என்று உமைர் சந்து தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு 4 ஸ்டார்களும் அவர் வழங்கியுள்ளார். "2025-ன் சிறந்த உணர்வுபூர்வமான காதல் கதை. சிலிர்க்க வைக்கும் தருணங்களும், பின்னணி இசையும்! க்ளைமாக்ஸ் தான் படத்தின் உயிர் என்றும் தெரிவித்துள்ளார். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தான் இசையமைப்பாளர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. தனுஷும் கிருத்தி சனோனும் தங்கள் திரைவாழ்க்கையின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த அற்புதமான படத்திற்காக அவர்கள் விருதுகளைப் பெற தகுதியானவர்கள்! கண்டிப்பாக பாருங்கள்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சனோன்: ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கிருத்தி சனோன், படத்தின் தீவிரமான உச்சக்கட்ட காட்சிகளைப் பற்றிப் பேசினார். "பல தீவிரமான காட்சிகள், க்ளைமாக்ஸ் மற்றும் அதற்கு முந்தைய காட்சிகள் மிக நீளமாக இருந்தன. அவை மிகவும் களைப்படையச் செய்தன. சுமார் 5-6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அந்தக் காட்சிகள் மிகவும் நெருக்கமானதாக இருந்தன" என்று கிருத்தி சனோன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X