தியேட்டரில் ரவுண்டு கட்டிய ரசிகர்கள்.. நடிகை கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து காப்பாற்றிய தனுஷ்..

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் உருவாகி இந்தி மற்றும் தமிழில் வெளியாகியுள்ள படம் தேரே இஷ்க் மே. இந்த படத்தை தனுஷின் இந்தி படமான ராஞ்சனா படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவானது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் தியேட்டரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தனுஷ் மற்றும் நடிகை கீர்த்தி சனோனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அப்போது கீர்த்தி சனோனை ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து பாதுகாக்க, கட்டிப்பிடித்து அழைத்துச் சென்றார் நடிகர் தனுஷ். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள தேரே இஷ்க் மே படத்திற்கு தமிழில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் நேரடித் தமிழ் படம் இல்லாததால், பெரிய அளவில் பிசினஸ் இல்லை. ஆனாலும் அவரது கதைத் தேர்வு, நடிப்பு போன்றவற்றுக்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தேரே இஷ்க் மே கொஞ்சம் ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.

இப்படி இருக்கும்போது இந்தியில் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. தெளிவாகச் சொல்லப்போனால், தனுஷின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில், அதாவது தனுஷின் நேரடி இந்திப் படங்களுடன் ஒப்பிடும்போது, இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளதால் தனுஷ் மற்றும் மொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tere Ishk Mein Promotions Dhanush s Special Gesture For Co-Star Kriti Sanon As They Get Mobbed Wins Hearts Watch
Photo Credit:

கட்டிப் பிடித்து காப்பாற்றிய தனுஷ்: இதனால் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னரும் படத்தின் புரோமோஷனை படக்குழு சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் இணைந்து பல திரையரங்குகளுக்குச் சென்று, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, மும்பையின் புகழ்பெற்ற Gaiety Galaxy திரையரங்கில் ரசிகர்களைச் சந்திக்க இருவரும் சென்றிருந்தார்கள். அப்போது ரசிகர்கள் கூட்டம் இவர்கள் இருவரையும் சூழந்து கொண்டனர். பவுன்சர்கள் இருந்தாலும், பவுன்சர்களைக் கடந்து ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், நடிகர் தனுஷ் உடனே நடிகை கீர்த்தி சனோனை கட்டிப் பிடித்து ரொம்பவும் அக்கறையாக அழைத்துச் சென்றார்.

பாராட்டு: நடிகர் தனுஷின் இந்த செயலைப் பார்த்த பலரும் தனுஷை பாராட்டி வருகிறார்கள். மனுஷன் என்னமா அக்கறையா இருக்காரு என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X