அர்னால்டுனா மட்டும் பயந்துடுவானா.. தமிழ்ராக்கர்ஸில் டெர்மினேட்டர் லீக்?

அர்னால்டு நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படம் தமிழ்ராக்கர்ஸில் தமிழ் மொழியில் லீக்காகியுள்ளது.

சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பில் டெர்மினேட்டர் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் திரைப்படம் இன்று வெளியானது.

வெளியான சில மணி நேரங்களிலேயே, தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்களில் டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் லீக் ஆகியுள்ளது.

இதனால், டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படத்தின் தமிழ்நாட்டு வசூல் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலிபோர்னியா காட்டுத்தீ

கலிபோர்னியா காட்டுத்தீ

கடந்த வாரம் தொடங்கிய கலிபோர்னியா காட்டுத்தீயில் இருந்து ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட இருந்த டெர்மினேட்டர் படத்தின் ப்ரீமியர் காட்சியும் காட்டுத்தீ காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் லிண்டா

மீண்டும் லிண்டா

டிம் மில்லர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படம், டெர்மினேட்டர் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. டெர்மினேட்டர் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் முன்னணி நடிகையாக நடித்த நடிகை லிண்டா ஹாமில்டன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, டெர்மினேட்: டார்க் ஃபேட் படத்தின் மூலம் தனது ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைத்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், அர்னால்டு நடிப்பில் 1984ம் ஆண்டு டெர்மினேட்டர் படம் வெளியானது. தமிழில் வெளியான ஷங்கரின் ரோபோட்டிக் படங்களான எந்திரன், 2.0 மற்றும் பல ஹாலிவுட் ரோபோ படங்களுக்கு அஸ்திவாரம் போட்டது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் படம் தான். தற்போது வெளியாகியுள்ள டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படத்தையும் ஜேம்ஸ் கேமரூன் தான் தயாரித்துள்ளார்.

பைரஸி

பைரஸி

உலகம் முழுவதிலும் இன்று வெளியான டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படம், அதன் ரசிகர்களை திருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில், தமிழ் படங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸ் பைரஸி தளத்தில் ரிலீசான கொஞ்ச நேரத்திலேயே டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படம் தமிழ் மொழியிலேயே லீக்காகியுள்ளது. இதன்மூலம், படத்தை தமிழில் வெளியிடும் விநியோகஸ்தரர்களுக்கு வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிரிகளை அழிக்கும் அர்னால்டால் கூட தமிழ்ராக்கர்ஸை அழிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X