மரண மாஸ்.. மாஸ்டர் படத்தின் அத்தனை நட்சத்திரங்களும் ஒன்றாக இருக்கும் போஸ்டர்.. வெறித்தனமா வைரலாகுது!
சென்னை: மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வரும் என்ற அறிவிப்புடன் வெளியாகியுள்ள போஸ்டர் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம் எப்போ ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு தான் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனங்களிலும் எழுந்துள்ளது.

ஒரு வருஷம் வேஸ்ட்
போன தீபாவளிக்கு பிகில் படத்தை ரிலீஸ் செய்து 300 கோடி வசூல் ஈட்டிய தளபதி விஜய், அடுத்த தீபாவளி வரை ரசிகர்களை காக்க வைக்கக் கூடாது, சம்மரிலேயே மாஸ்டரை இறக்க வேண்டும் என கடின உழைப்பை கொட்டி உருவான படம் மாஸ்டர். ஆனால், வீணாப் போன இந்த கொரோனா காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு கூட படம் ரிலீஸ் ஆகாத சூழல் உருவாகி விட்டது.

நேரடியாக ஒடிடி தளத்தில்
சூர்யாவின் சூரரைப் போற்று படம் தீபாவளிக்குள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாத சூழலை அறிந்து கொண்ட நடிகர் சூர்யா, ஒரு தயாரிப்பாளராக அந்த படத்தை பல எதிர்ப்புகளையும் மீறி வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்வதாக முடிவெடுத்தார். உடனே மாஸ்டர் படமும் ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.

மாஸ்டர் பொங்கல்
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஆன்லைன் தளங்களும் எப்படியாவது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை அதிக தொகை கொடுத்தாவது மடக்கி விட வேண்டும் என ஏகப்பட்ட ராஜதந்திரங்களை தீட்டி வருகின்றன. ஆனால், வரும் பொங்கல் தியேட்டர்களில் மாஸ்டர் பொங்கலாக இருக்க வேண்டும் என்பதே தளபதியின் விருப்பம்.

அனைத்து நட்சத்திரங்களும்
இதற்கு முன் பார்க்காத தளபதி படமாக மாஸ்டர் படம் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஏனென்றால், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி தொடங்கி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் மற்றும் விஜய்யின் நண்பர்கள் என பலரும் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருப்பது போல ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று தற்போது தளபதி ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











