கமல் நீலிக் கண்ணீர் வடிக்கிறார், முதுகில் குத்துகிறார்: போட்டுத் தாக்கும் காயத்ரி ரகுராம்
சென்னை: காயத்ரி ரகுராம் உலக நாயகன் கமல் ஹாஸனை முதிகில் குத்துபவர் என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அது நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தெரிவித்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் கமல் ஹாஸனை முதுகில் குத்துபவர் என்று விளாசியுள்ளார். இது குறித்து காயத்ரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது போன்ற முட்டாள்தனமான பேச்சுகளை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள் அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம். கமல் ஹாஸன், நீங்கள் திரையுகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.
மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மமதா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது. மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள் கமல் ஹாஸன்.
என் அங்கிளாக, நடிகராக உங்களை மதிக்கிறேன் கமல் ஹாஸன். ஆனால் இது போன்ற வார்த்தைகளை அல்ல. மாற்றமாக இருங்கள். மேலும் ஒரு அரசியல்வாதியாக அல்ல.
என்னை முதுகில் குத்துபவர்கள் பலர் உள்ளனர். அவர்களை நான் தீவிரவாதிகள் என்று கூறட்டுமா? அது உங்களையும் சேர்த்து தான் கமல் ஹாஸன். பல ஆண்டுகளாக காங்கிரஸ் இந்தியாவின் முதுகில் குத்தியுள்ளது. அப்படி என்றால் காங்கிரஸை தீவிரவாதி எனலாமா?
கமலை பார்த்து நடித்தது போதும் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி.


Click it and Unblock the Notifications











