#தலைவர்169 - ரெடி ஆகிறதா அடுத்த ஃபேன் பாய் சம்பவம்!?

சென்னை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.

ஃபேன் பாய் தனது பிடித்தமான நடிகரை வைத்து படம் இயக்கி அசத்துவது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தை இயக்கி அசத்தினார். அவரை தொடர்ந்து மற்றொரு சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கவுள்ளார் என தெரிகிறது.

பெரிய வெற்றி

பெரிய வெற்றி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை கொடுத்து பல ரசிகர்களை கவர்ந்தார். படமும் பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.

அண்ணாத்தபடப்பிடிப்பு

அண்ணாத்தபடப்பிடிப்பு

தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவர வேண்டிய அண்ணாத்த திரைப்படம் பல இன்னல்களை சந்தித்து இது வரை வெளிவராமல் உள்ளது. தற்போது ஹைதராபாத்தில் தீவிர பாதுகாப்புடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.

169வது படம்

169வது படம்

இதையடுத்து சூப்பர் ஸ்டாரின் 169வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் ஆவார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பலரின் பாராட்டுகளை அள்ளியவர் தேசிங்கு பெரியசாமி.

Recommended Video

Nayanthara Joins Annathe Shooting In Hyderabad | Annathr Villain, Ponniyin Selvan Update
பாராட்டிய ரஜினி

பாராட்டிய ரஜினி

தேசிங்கு பெரியசாமியின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார், தொலைபேசியில் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டினார். அப்போதே தனக்கும் ஒரு கதையை தயார் செய்ய சொன்னார். எனவே #தலைவர்169 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க நிறைய வாய்ப்புள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் இந்த தகவலின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X