இரும்புத்திரை ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்.. காளி, இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் அறிவிப்பு!
Recommended Video

சென்னை : விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தை வாங்கியவர்கள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அனுமதியின்றி ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாகக் கூறினார் விஷால்.
விஷால் தயாரிப்பில் மித்ரன் இயக்கியிருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் சினிமா ஸ்ட்ரைக்குக்கு முன்பே ரிலீஸுக்கு தயாரான நிலையில், மே 11-ம் தேதி ரிலீஸ் அறிவிப்பையும் மறுத்ததால் ரிலீஸ் தள்ளிப்போகும் எனக் கருதப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு தற்போது 'இரும்புத்திரை' படத்தை மே 11 அன்று வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11 அன்று வெளியாவது உறுதியாகியிருக்கிறது.
'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மே 4-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லையாம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' திரைப்படம் மே 18 அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ருதா என நான்கு நாயகிகள் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











