பலமுறை தள்ளிப்போன சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதுவாவது காப்பாற்றுமா?

By Vignesh Selvaraj

சென்னை : நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடியனாக நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார். சொல்லப்போனால், காமெடி வேடங்களில் நடிப்பதையே தற்போது நிறுத்திவிட்டார்.

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய வெற்றி பெறாமல் ஏமாற்றி வருகின்றன. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் ஏமாற்றியது.

TFPC confirms Server sundaram july 6 release

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சர்வர் சுந்தரம்', 'மன்னவன் வந்தானடி', 'ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் சில சிக்கல்களால் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படம் பல முறை விரைவில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் 'சர்வர் சுந்தரம்' படத்தை ஜூலை மாதம் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தை அந்தத் தேதியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்குபடுத்தல் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

TFPC confirms Server sundaram july 6 release

'சர்வர் சுந்தரம்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பி.கே.வர்மா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்தே அவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மார்க்கெட் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X