தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரியை நியமித்த தமிழக அரசு: விஷால் வழக்கு

By Siva

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு அதிகாரி ஒருவரை நியமித்ததை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையிலான அணியின் செயல்பாடுகள் சரியில்லை என்று தயாரிப்பாளர்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள். விஷால் அணி நிர்வாகிகள் ரூ. 7 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

TFPC issue: Vishal files a case in Chennai High Court

விஷால் யார் பேச்சையும் கேட்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டதால் அதன் பொறுப்பை தமிழக அரசு ஏற்றது.

மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க சேகர் என்ற அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில் சேகரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரின் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னதாக விஷாலின் செயல்பாடுகளை கண்டித்து தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டிருப்பது விஷாலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X