ஒருவழியாக போலீஸ் முன் ஆஜரானார் தாடி பாலாஜி!
சென்னை: தன்னைக் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி நித்யா தொடர்ந்து அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் தாடி பாலாஜி.
பெரிய திரை, சின்னத் திரையில் காமெடி நடிகராக வலம் வரும் தாடி பாலாஜிக்கும் அவது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனித்தனியாக வசித்து வருகிறார்கள். 2 மாதங்களுக்கு முன்பு, நித்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாடி பாலாஜி மீது வன்கொடுமை புகார் அளித்தார்.

ஆனால் போலீசார் தாடி பாலாஜியை விசாரிக்கவில்லை என்று தொடர்ந்து ஊடகங்களில் பேசி வந்தார் நித்யா.
தாடி பாலாஜி குடித்து விட்டு தன்னை அடிப்பதாகக் குற்றம்சாட்டினார். ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகியதை மறைத்துவிட்டார், தன்னையும் குழந்தையையும் கொலை செய்ய முயன்றார் என்றெல்லாம் அவர் புகார் கூறி வந்தார்.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக தாடி பாலாஜிக்கு போலீசார் அழைப்பாணை அனுப்பினர். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன், தாடி பாலாஜி ஆஜரானார். அவரை போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் விசாரித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.


Click it and Unblock the Notifications











