ரொம்ப வொர்ஸ்ட்டான கேரக்டர்.. கமல் பற்றி அவதூறு.. தாடி பாலாஜி மனைவி நித்யா சர்ச்சை பேச்சு!
சென்னை: தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி நித்யாவுக்கு எதிராக தாடி பாலாஜி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
Recommended Video
இந்நிலையில், நித்யா தரப்பிடம் செய்தி நிறுவனம் ஒன்று போன் செய்து பேட்டி எடுக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை முன்னதாக தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் பற்றி நித்யா பேசிய சர்ச்சை பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 2வில் தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் பிரச்சனை
நடிகர் தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தார். தாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் பிறந்த மகள் போஷிகா அம்மா நித்யாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். குடித்து விட்டு தன்னைப் போட்டு அடிப்பதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் தாடி பாலாஜி மீது நித்யா கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பியது.

இருவரும் பங்கேற்பு
சர்ச்சைக்குரிய பிரபலங்களை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற செய்து டிஆர்பியை ஏற்றிக் கொண்டிருக்கும் அந்த டீம் பிக் பாஸ் சீசன் 2ல் தாடி பாலாஜி மற்றும் அவரை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி நித்யா என இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பினர். நிகழ்ச்சி முடிவதற்குள் இருவரும் சேர்ந்தால் நல்லா இருக்கும் என கமல்ஹாசனும் கூறியிருந்தார்.

அல்டிமேட்டில் பாலாஜி
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மீண்டும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை தாடி பாலாஜி பரப்புகிறார் என்றும் மகள் மீது திடீரென பாசம் கொண்டவர் போல நடிக்கிறார் என்றும் தன்னை உள்ளே விட்டால் இப்போ நடக்குறதே வேறு என மகளுடன் லைவ்வில் நித்யா பேசியிருந்தார்.

மனைவி மீது புகார்
இந்நிலையில், தாடி பாலாஜி சமீபத்தில் தனது மகளை மனைவி நித்யா தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும், 7வது படிக்கும் மகளை பள்ளிக்கு அனுப்பாமல் சமூக வலைதளங்களில் காசு சம்பாதிக்கும் நோக்கத்தோடு பயன்படுத்துகிறார் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்துள்ளார். குழந்தையை தான் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

கோர்ட்டில் பார்த்துக்குறேன்
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் நித்யாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது, மீடியாக்களில் பேசினால் நீதி கிடையாது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என பேசினார். மேலும், தாடி பாலாஜி சொல்வது எல்லாம் பொய் என்றும் கூறினார்.

கமல் பற்றி அவதூறு பேச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் இருவரும் கலந்து கொண்டபோது உங்கள் இருவருக்கும் கமல்ஹாசன் நிறைய அறிவுரைகளை வழங்கினாரா என கேட்ட கேள்விக்கு, "அந்த ஆள பற்றி பேசாதீங்க.. நிறைய கன்டென்ட் கொடுத்துவிடுவேன்.. அவர் ரொம்ப வொர்ஸ்ட்.. கமல் மாதிரி ஒரு ஆள நான் பார்த்ததே கிடையாது" என கோபத்துடன் பேசி போனை கட் செய்து விட்டார்.

வெடித்தது சர்ச்சை
நித்யா மீது ஏகப்பட்ட புகார்களை தாடி பாலாஜி முன் வைத்து சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில், தற்போது கமல் பற்றி இப்படி நித்யா பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கமல் ரசிகர்கள் நித்யாவை திட்டித் தீர்த்து வருகின்றனர். நித்யா பிக் பாஸ் வீட்டில் என்ன எல்லாம் நடந்தது என்பதை போட்டு உடைப்பாரா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











