Thaai Kizhavi BO: பட்டையைக் கிளப்பிய தாய் கிழவி பவுனு தாயி.. பாக்ஸ் ஆபீஸில் கோடிகளை அள்ளீட்டாங்க!

சென்னை: இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் கலையரசி ராதிகா நடிப்பில் உருவான தாய் கிழவி படம் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்தார். படத்தில் சிங்கம் புலி, முனீஸ் காந்த், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் ஜன ரஞ்சகமாக இருந்தது மட்டுமல்லாமல் படம் பேசிய கருத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதை அடுத்து படம் ரூபாய் 75 கோடிகள் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் படக்குழு வெற்றிவிழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Thaai Kizhavi 25 Days 75 Crores Box Office Collection SK Radhika Sarathkumar So Happy

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சூரியை வைத்து எடுத்த படமான கொட்டுக்காளி படம் தமிழ் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் படம் சர்வதேசங்களில் விருதுகளை வாங்கிக் குவித்தது.

சிவகார்த்திகேயன் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் படம் வெளியாகிறது என்றாலே ஒரு திருப்தியான படம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை சிவகார்த்திகேயன் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். மேலும் நேர்த்தியான கதையைத் தேர்வு செய்து, அதற்குரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்து, அதை முறையாக புரோமோஷன் செய்து, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து, ரிலீஸ் செய்து வணிக வெற்றியை ஈட்டும் யுத்தியை சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராக தொடர்ந்து செயல்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறார். அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள படம் தான் தாய் கிழவி.

நம்பிக்கை: தாய் கிழவி படத்தின் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது. அதுவும் படத்தின் டீசர் வெளியானதும் படம் ஜனரஞ்சகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று கூறும் அளவுக்கு இருந்தது. ராதிகாவிற்கு கொடுக்கப்பட்ட வசனங்கள் டிரைலரிலேயே ரசிகர்களை தியேட்டரை நோக்கி வரவழைக்கும் வகையில் இருந்தது.

வசூல்: படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதை அடுத்து படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது படம் ரூபாய் 75 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டதாக படக்குழு மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது. மேலும் படத்தைப் பார்க்க இன்னும் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் தாய் கிழவி படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X