Thaai Kizhavi Day 8 Box Office - தாய் கிழவி 8வது நாள் வசூல் தெரியுமா?.. இரண்டாவது வார பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்

சென்னை: ராதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் தாய் கிழவி படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கியிருக்கிறார். இதுதான் அவரது முதல் படம் ஆகும். சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். படத்துக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி இரண்டாவது வார தொடக்கமான நேற்று தாய் கிழவியின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராதிகா மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். 80களில் ஹீரோயினாக கலக்கிய அவர்; 90களிலிருந்து கேரக்டர் ரோல்கள் செய்ய ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கிழக்கு சீமையிலே, தாஜ்மஹால் உள்ளிட்ட படங்கள் எல்லாம் பெரிய வரவேற்பை பெற்றன. வெள்ளித்திரையில் கலக்கியதுபோன்றே சின்னத்திரையிலும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். அதுவும் சினிமாவில் கிடைத்த வரவேற்புக்கு நிகராக அவருக்கு பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thaai Kizhavi Box Office Day 8 Radhika Starrer Earns 2 25 Crore After 23 25 Crore Week 1
Photo Credit:

தாய் கிழவி: தொடர்ந்து கேரக்டர் ரோல்கள் செய்துவரும் அவர் இப்போது தாய் கிழவி படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். சிவக்குமார் முருகேசன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். ஆண்பாவம் பொல்லாதது படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியது இவர்தான். இவர் மீது அதீத நம்பிக்கை வைத்து தாய் கிழவி படத்தை தயாரித்தார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். அப்படத்துக்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Also Read
உழைப்புக்கு கிடைத்த பரிசு.. மகனை பைலட்டாக்கிய எதிர்நீச்சல் நடிகை!
உழைப்புக்கு கிடைத்த பரிசு.. மகனை பைலட்டாக்கிய எதிர்நீச்சல் நடிகை!

சூப்பர் ரெஸ்பான்ஸ்: படத்துக்கு திரைத்துறை பிரபலங்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் நல்ல ஆதரவு கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முக்கியமான இயக்குநர் கிடைத்துவிட்டார் என்று புகழாரம் சூட்டினார்கள். அதேபோல் ராதிகாவின் நடிப்பையும், படத்தையும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். வாழை படம் போன்று ரிலீஸுக்கு முன்னதாக எக்கச்சக்க ஹைப் ஏற்றப்பட்டுவிட்டதன் காரணமாக மக்களும் இப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாகவே இருந்தார்கள்.

ரசிகர்களிடமும் ஹிட்: படம் ரிலீஸானதும் தங்களது குடும்பத்துடன் சென்று பார்த்தார்கள். சிங்கிளாக சென்று பார்த்தவர்களும் அடுத்த முறை உறவுகளை அழைத்து செல்ல தொடங்கினார்கள். எனவே ஒரு ஹீரோ நடித்த படத்துக்கு இருக்கும் கூட்டம் போன்று இதற்கும் காணப்பட்டது. ரசிகர்களும் ராதிகாவை, சிவக்குமாரை, படத்தை வெகுவாக பாராட்டிவிட்டார்கள். எனவே இந்த வருடத்தில் கோலிவுட்டில் அமைந்த பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது தாய் கிழவி.

வசூல் எவ்வளவு?: வசூலிலும் படம் டீசன்ட்டான நிலையையே எட்டியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி ஒரு வார முடிவில் 23.25 கோடி ரூபாய் வசூலித்ததாம். இந்நிலையில் ரிலீஸாகி இரண்டாவது வாரத்தின் தொடக்கமான நேற்றைய வசூல் தொடர்பாகவும் அந்த தளம் தரவுகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி 2.25 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X