Thaai Kizhavi Day 1 Box Office - தாய் கிழவி படத்தின் முதல் நாள் வசூல் என்ன?.. செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கியிருக்கும் படம் தாய் கிழவி. இந்தப் படத்தில் ராதிகா லீடு ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் இளவரசு, தம்பி இராமையா, அருள்தாஸ், பாலசரவணன், முனீஸ்காந்த், முத்துக்குமார், ரேச்சல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். நேற்று படம் வெளியான சூழலில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ராதிகா சரத்குமாரை லீடு ரோலில் வைத்து சிவக்குமார் முருகேசன் இயக்கியிருக்கும் திரைப்படம் தாய் கிழவி. இதில் அவருடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இதுவரை சிவா தயாரித்த படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக பலமான வரவேற்பை பெற்றிருப்பவை. எனவே இப்படத்தின் மீதான ஹைப்பும் ட்ரெய்லர், க்ளிம்ப்ஸ், போஸ்டர்கள் வந்தபோதே பற்றிக்கொண்டன.

பாராட்டிய பிரபலங்கள்: படத்தை முதலில் கமல்ஹாசனுக்கு திரையிட்டு காண்பித்தது படக்குழு. அதை பர்த்துவிட்டு ஏகபோகமாக பாராட்டியிருந்தார் உலக நாயகன். அதனையடுத்து திரையுலக பிரபலங்களுக்கு ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அதிலும் படத்துக்கு மிக பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்திருந்தது. ஜோதிகா உள்ளிட்டோர் எல்லாம் படத்தை பாராட்டி நீண்ட போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி எங்கும் தாய் கிழவிக்கு பாராட்டு கிடைத்ததால் மக்களும் படத்தை பார்க்க ஆவலாக இருந்தார்கள்.
நேற்று ரிலீஸான படம்: படமானது நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. என்னதான் பிரபலங்களிடம் பாராட்டை பெற்றாலும் ரசிகர்கள் படத்தை ஹிட்டாக்குவார்களா என்ற ஆவல் படக்குழுவிடம் இருந்தது. நேற்று முதல் காட்சியிலிருந்தே ரசிகர்கள் குடும்பத்தினருடன் தியேட்டர்களுக்கு படையெடுத்து சென்று பார்த்தார்கள். இப்படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் நேற்றைய கூட்டத்தில் பல பெண்களை பார்க்க முடிந்தது.
ரசிகர்களிடம் கனெக்ட் ஆனதா?: படம் பார்த்த பெரும்பாலானோர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தார்கள். குறிப்பாக பெண்களிடம் அப்ளாஸை அள்ளியிருக்கிறது தாய் கிழவி. படத்தின் கதையையும், வசனத்தையும் பாராட்டிய அவர்கள் ராதிகாவின் நடிப்பையும் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். கண்டிப்பாக இந்தப் படத்துக்காக அவருக்கு விருது வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கியிருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் ராதிகாவுக்கு கிடைக்காத தேசிய விருது இந்தப் படத்தின் மூலமாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தாய் கிழவி கலெக்ஷன்: இந்நிலையில் முதல் நாளில் தாய் கிழவி செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி நேற்று இப்படம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. முதல் நாளே இரண்டரை கோடி ரூபாய் அள்ளியிருக்கிறது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்திருப்பதால் இனி வரும் நாட்களிலும் கூட்டம் வர வாய்ப்புகள் அதிகம். எனவே இன்னும் அதிக வசூலை படம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications















