Thaai Kizhavi Day 7 Box Office - தாய் கிழவி 7ஆவது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் ஒரு வார கலெக்ஷன் என்ன?
சென்னை: சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ராதிகா லீடு ரோலில் நடித்திருக்கும் படம் தாய் கிழவி. ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாசிரியர் சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். படத்துக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றோடு படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்திருக்கிறது. அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தாய் கிழவி திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய ரெஸ்பான்ஸை செலிபிரிட்டிகளிடம் பெற்றது. படம் பார்த்த கமல்ஹாசன், ஜோதிகா உள்ளிட்டோர் எல்லாம் இயக்குநரை, ராதிகாவை, சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டினார்கள். திரைத்துறை பிரபலங்கள் மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களும் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்தார்கள். அதன் காரணமாக ஏற்கனவே இருந்த ஹைப் படத்தின் மீது எக்கச்சக்கமாக அதிகரித்தது.

ரசிகர்களும் பாராட்டு: என்னதான் திரைத்துறைக்குள் படத்தை கோபுரத்தில் தூக்கி வைத்தாலும்; ரசிகர்கள் நினைத்தால் அது அந்த இடத்தில் நிலைத்து இருக்கும். எனவே ரசிகர்களிடம் இந்தப் படம் என்ன மாதிரியான விதத்தில் வரவேற்பை பெறும் என படக்குழு ஆவலோடு காத்திருந்தது. அவர்களுக்கு நிம்மதி தரும் விதமாக செலிபிரிட்டிகளிடம் பெற்ற விமர்சனத்தை போன்றே ரசிகர்களிடமும் பெற்றது. பெண்களுக்கு தேவையான படத்தை ரொம்பவே எதார்த்தமாக இயக்குநர் கொடுத்திருக்கிறார் என பாராட்டிவருகிறார்கள்.
ராதிகாதான் டாப் கிளாஸ்: படத்தின் தூணாக ராதிகா இருக்கிறார். இயக்குநர் சொல்ல வந்த விஷயத்தை ராதிகா தன்னுடைய நடிப்பின் மூலம் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தனை வருடங்கள் அவருக்கு கிடைக்காமல் இருந்த தேசிய அளவிலான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்பது அனைவரது கருத்து. அதேபோல் சிவக்குமார், 'எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு ரத்த கண்ணீர்.. அவர் மகள் ராதிகாவுக்கு இந்த தாய் கிழவி' என்று பாராட்டியது நூறு சதவீதம் பொருந்தும். அப்படியே ராதாவை பார்த்தது போல் ராதிகாவின் நடிப்பு இருந்ததாகவும் புகழ்ந்தார்கள்.
நல்ல லாபம்: இந்தப் படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் என கூறப்படுகிறது. படம் வெளியான மூன்று நாட்களில் 22 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எஸ்கேவுக்கு இதன் மூலம் சரியான லாபம் கிடைத்திருக்கும். தொடர்ந்து நல்ல படங்களை தயாரித்துவரும் அவருக்கு; அடுத்தடுத்தும் இதே போன்ற படங்களை தயாரிப்பதற்கு நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும் என்பதால் தாய் கிழவி படம் ரசிகர்கள், அந்தப் படத்தின் இயக்குநருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் நல்லது செய்யகூடியதாக அமைந்திருக்கிறது.
வசூல் விவரம்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோடு ஒரு வாரம் முடிந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்கு நேற்று படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்து Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருக்கிறதாம். அந்த தளத்தின் இன்னொரு தரவுப்படி ஒரு வாரத்தில் இப்படம் இந்தியாவில் 23 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. முந்தைய நாட்கள் வசூலை விட நேற்றைய வசூல் குறைவுதான் என்றாலும்; இன்றிலிருந்து ஞாயிறு வரை மீண்டும் கூட்டம் சேர்ந்து வசூல் பிக்கப் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications















