Thaai Kizhavi First Review - தாய் கிழவி படம் எப்படி இருக்கு?.. முதல் விமர்சனம் இதோ.. சம்பவம் தயார்
சென்னை: சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் தாய் கிழவி. மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கும் இப்படமானது வரும் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று கமல்ஹாசன், சரத்குமார், ராதிகா, சிவகார்த்திகேயன், ஆர்த்தி உள்ளிட்டோருக்கு ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது.
நடிகராக கலக்கிவரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்துவருகிறார். இதுவரை அவர் தயாரித்திருக்கும் கனா, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. சிவா இப்படிப்பட்ட படங்களை தயாரிப்பதன் மூலம் கோலிவுட்டுக்கு தரமான படங்களை கொடுக்கிறார். பல திறமைகளை அறிமுகப்படுத்துகிறார்; இதேபோல் தொடர்ந்து அவர் செய்ய வேண்டும் என பலரும் வாழ்த்திவருகிறார்கள். கமல்கூட அமரன் வெற்றி விழாவில், 'சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே சிவகார்த்திகேயன் போடுகிறார். இவர் என் அலைவரிசையோடு ஒத்துப்போகிறார்' என பெருமையோடு சொல்லியிருந்தார்.
தாய் கிழவி: சிவகார்த்திகேயன் இப்போது தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கியிருக்கிறார். இவர்தான் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் கதாசிரியர். ராதிகா இப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். மேலும், இளவரசு, ஜார்ஜ் மரியான், அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். முதலில் 20ஆம் தேதி வெளியாகவிருந்த படம் சில காரணங்களால் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது.

சூப்பர் ரெஸ்பான்ஸ்: படத்தின் அப்டேட்டுகள் எல்லாம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் காட்சியும் ஏகபோக ரெஸ்பான்ஸை அள்ளியது. அதுமட்டுமின்றி ராதிகாவின் நடிப்பு மற்றும் மேக்கப் அனைவரையும் மெர்சல் ஆக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக இப்படத்துக்காக அவர் தேசிய விருதை வெல்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அவரது கெட்டப்பை பார்த்து கமலும் பாராட்டியிருந்தார்.
ப்ரீமியர் ஷோ: இந்நிலையில் நேற்று கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சரத்குமார், ராதிகா, சிவகார்த்திகேயனின் மனைவி ராதிகா உள்ளிட்டோர் தாய் கிழவி படத்தை பார்த்தார்கள். படத்தை பார்த்துவிட்டு பேசிய கமல்ஹாசன், "இந்தப் படத்தை பற்றி நானோ, பத்திரிகைகளோ சொல்வதைவிடவும்; மக்கள் சொல்வார்கள். சிவகார்த்திகேயன் நல்ல தயாரிப்பாளர். சிவக்குமார் முருகேசன் சிறப்பான இயக்குநார்" என்றார். கமல்ஹாசன் இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருப்பது மேற்கொண்டு இதற்கு ஹைப்பை எகிற வைத்திருக்கிறது.
சேயோன் வாய்ப்பு: முன்னதாக, தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு இம்ப்ரெஸ் ஆன சிவகார்த்திகேயன்; சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான் அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸும் அனைவரையும் கவர்ந்தது. அந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications