Box Office: 50 கோடியப்பு.. அரை சதம் அடித்த தாய் கிழவி.. சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன், ராதிகா!

சென்னை: மகளிர் தினமான நேற்றும் தியேட்டர்களில் தாய் கிழவி வசூல் தாண்டவமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான தாய் கிழவி திரைப்படம் 50 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த ஆண்டு இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படம் தான் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை ஈட்டி முதலிடத்தில் உள்ளது. பராசக்தி படத்துக்குப் பிறகு வெளியான எந்தவொரு படமும் 50 கோடி கூட கடக்கவில்லை.

Thaai Kizhavi joins 50 Crore Club within 10 Days
Photo Credit:

இந்நிலையில், ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி திரைப்படம் 50 கோடி வசூலை கடந்து மாஸ் காட்டி வருகிறது. அதிகபட்சம் 75 கோடி வரை இந்த படம் கடக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இந்த மாதம் கென் கருணாஸின் யூத் படத்தைத் தவிர்த்து தமிழ் சினிமாவில் பெரிதாக எந்தவொரு படமும் இல்லை என்கின்றனர்.

50 கோடி வசூல்: குறைந்த பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி திரைப்படம் 50 கோடி வசூலை உலகளவில் தாய் கிழவி திரைப்படம் கடந்துள்ளது என சிவகார்த்திகேயன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆண்கள் துணையின்றி பெண்களாலும் வீட்டு நிர்வாகத்தையும் வேலையையும் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் பெண்கள் எதற்காகவும் ஆண்களிடம் கைகட்டி நிற்க தேவையில்லை என்கிற நிலை உருவாக வேண்டும் என்கிற கருத்துக்களுடன் வெளியான தாய் கிழவி திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக தமிழ்நாட்டு மக்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்துக் கொண்டாடி வருகின்றனர்.

மகளிர் தினம் வசூல் அதிகரிப்பு: பிப்ரவரி 27ம் தேதி வெளியான தாய் கிழவி திரைப்படம் 10 நாட்களில் 50 கோடி வசூலை கடந்து வெற்றிவாகை சூடியுள்ளது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளின் சமீபத்திய உமன் சென்ட்ரிக் படங்கள் கூட இந்தளவுக்கு வசூல் வேட்டை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை 4.60 கோடி வசூலும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் அதிகபட்சமாக 5 கோடி வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. கண்டிப்பாக தாய் கிழவி திரைப்படம் மேலும், 2 வாரங்கள் தடையின்றி ஓடும் என்றும் 75 கோடி முதல் 80 கோடி வரை அதிகபட்சம் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X