Thaai Kizhavi Official Box Office: தாய் கிழவி படம் பேய் ஹிட்.. உலக வசூல் அறிவிப்பு.. பாவம் தெறி!
சென்னை: மகளிர் தினத்தை ஒரு வாரத்துக்கு முன்னாடியே சிவகார்த்திகேயனும் ராதிகா சரத்குமாரும் சிவகுமார் முருகேசன் மூலம் கொண்டாடி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் இல்லாத நிலையில், 50 கோடி வரை தாய் கிழவி வசூல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைவேளை காட்சியில் விஸ்வரூபம் ரெஃபரன்ஸ் முதல் படம் முழுக்க கமல்ஹாசன் ரெஃபரன்ஸ் ஆக வைத்து அடுத்து கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் படத்தையும் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார்.

இந்த வாரம் தாய் கிழவிக்கு போட்டியாக வெளியான விஜய்யின் தெறி ரீ ரிலீஸ், சரத்குமாரின் ஆழி மற்றும் ஆரி அர்ஜுனின் ஃபோர்த் ஃப்ளோர் உள்ளிட்ட படங்கள் க்ளீன் வாஷ் அவுட் ஆகியுள்ளன.
தாய் கிழவி ஓவர்சீஸ் வசூல்: அஹிம்சா எண்டர்டெயின்மென்ட் தாய் கிழவி படத்தை ஓவர்சீஸில் வெளியிட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் நிலவினாலும் வெளிநாடுகளில் தாய் கிழவி படத்தை தியேட்டர்களில் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். 3 நாட்களில் ஓவர்சீஸில் மட்டும் 5.5 கோடி ரூபாய் வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தாய் கிழவி உலகளவில் மொத்த வசூல்: மேலும், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தாய் கிழவி திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் 22 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுமார் 12 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவானதாக கூறப்படுகிறது. தியேட்டர் வசூலே 50 கோடியை அசால்ட்டாக தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ ரைட்ஸ் என தயாரிப்பாளருக்கு கை மேல் பலன் கிடைக்கும் என்கின்றனர்.
மகளிர் தினக் கொண்டாட்டம்: பெண்கள் கடைசி வரை யார் தயவும் இல்லாமல் சுதந்திரமாக வாழ முடியும், வாழ வேண்டும் என்கிற கருத்துக்களை காமெடியுடன் கலந்துக்கட்டி ஊர் மக்களையும் கவரும் வகையில் தாய் கிழவி படம் வெளியான நிலையில் கடந்த வாரமே மகளிர் தினக் கொண்டாட்டம் தியேட்டர்களில் களைகட்டியுள்ளது. சிவகார்த்திகேயனை வைத்தும் சேயோன் படத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்தை ஊரில் உள்ள சாமிகளுக்கு இடையே உள்ள சர்ச்சைகளை வைத்து கொடுத்து இந்த ஆண்டு மீண்டும் கல்லா கட்டுவார்கள் என்றே தெரிகிறது.

பாவம் தெறி: கலைப்புலி எஸ். தாணு தவறான நேரத்தில் தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்துவிட்டார் என்றே ரசிகர்கள் கூறுகின்றனர். தெறி திரைப்படம் வசூல் பெரிதாக வெளியே சொல்லிக்கொள்ளும்படி கூட இல்லை என்றும் பல தியேட்டர்களில் இருந்து படத்தையே தூக்கிவிட்டு தாய் கிழவிக்கு ஸ்க்ரீன்கள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











