'தானா சேர்ந்த கூட்டம்' நீக்கப்பட்ட காட்சி... யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்!
சென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், செந்தில் மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்திற்கு சூர்யா ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளில் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒரு நிமிட காட்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தில் நீக்கப்பட்ட மற்ற சில காட்சிகளும் வெளியாகும் எனத் தெரிகிறது.

சூர்யா, சி.பி.ஐ அதிகாரி வேலைக்காக முயற்சித்து, தகுதியும்ம் திறமையும் இருந்தும் உயரதிகாரி ஒருவரின் செல்வாக்கால் வெளியேற்றப் படுவார். அதனால், கலங்கிப்போய் வீட்டுக்கு வரும் சூர்யாவிடம் தம்பி ராமையா பேசும் வசனம் நீளம் கருதி படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
அந்த நீக்கப்பட்ட காட்சி சோனி மியூசிக் நிறுவனம் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ரசிகர்களின் அமோக ஆதரவுடன் இந்த்அ வீடியோ யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











