For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'தானா சேர்ந்த கூட்டம்' அப்பட்டமான காப்பியா? - 'ஸ்பெஷல் 26' கதை என்ன?

  By Vignesh Selvaraj
  |
  'தானா சேர்ந்த கூட்டம்' அப்பட்டமான காப்பியா? - 'ஸ்பெஷல் 26' கதை என்ன?- வீடியோ

  சென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.

  கார்த்திக், ரம்யாகிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் வெளியானதுமே, இப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல் 26' படத்தின் காப்பி எனக் கூறப்பட்டது.

  சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் அப்பட்டமான காப்பி எனக் கூறி வருகிறார்கள். 'ஸ்பெஷல் 26' கதையை இப்போது பார்க்கலாம். பிறகு, காப்பியா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

  ஸ்பெஷல் 26 படம்

  ஸ்பெஷல் 26 படம்

  பாலிவுட்டில் நீரஜ் பாண்டே இயக்கிய படம் 'ஸ்பெஷல் 26'. இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாயி, ஜிம்மி ஷெர்கில் ஆகியோர் நடித்திருப்பார்கள். 2013-ல் வெளிவந்து வசூலைக் குவித்த இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைத் தனது நேர்த்தியான திரைக்கதையால் ரசிக்கவைத்திருப்பார் நீரஜ் பாண்டே.

  உண்மைக் கதை

  உண்மைக் கதை

  1987-ம் வருடத்தில் 26 பேர் கொண்ட குழுவினர் சி.பி.ஐ அதிகாரிகளைப் போல நடித்து மும்பையில் இருக்கும் பிரபல நகைக்கடை ஒன்றில் கொள்ளை அடித்தனர். பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் ஆகியவை கொள்ளை போயின. அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தான் 'ஸ்பெஷல் 26' படமாக உருவானது.

  அக்‌ஷய் குமார்

  அக்‌ஷய் குமார்

  சி.பி.ஐ செலக்‌ஷன் இன்டர்வியூவில் தோல்வியடைந்த மகா புத்திசாலியான அக்‌ஷய் குமார், இன்னும் மூவருடன் இணைந்து டிப்டாப்பாக உடை அணிந்து, அரசியல்வாதிகள், தொழிலதிபர்களிடம் தோரனையாகப் பொய்யாகப் பேசி, சி.பி.ஐ, வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நம்பவைத்து அசால்ட்டாக கொள்ளை அடிக்கிறார்கள். இதில் அக்‌ஷய் குமாரின் கூட்டாளியாக அனுபம் கெரும் நடித்திருப்பார்.

  1980 கதை

  1980-களின் இறுதிப் பகுதிக் கதை என்பதால் அந்தக் காலத்திய கட்டிடங்கள், வாகனங்கள் என பார்த்துப் பார்த்துக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் இந்த கொள்ளை கும்பலைத் தேடும் சி.பி.ஐ அதிகாரியாக மனோஜ் பாஜ்பாயி நடித்திருந்தார். 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நிழலுலக தாதா இம்ரான் பாயாக நடித்திருப்பாரே அவரேதான்.

  அப்பட்டமான காப்பி

  அப்பட்டமான காப்பி

  தானா சேர்ந்த கூட்டம் கதை அப்பட்டமாக 'ஸ்பெஷல் 26' படத்தின் காப்பி போல உள்ளது. போலீஸ் ஆக ட்ரை பண்றீங்களோ எனக் கேட்பதற்கு, சூர்யா, 'போலீஸ்லாம் நிறைய பார்த்தாச்சு சார்... நம்ம இப்போ அப்டியே வேற ட்ராக்கு..." எனச் சொல்கிறார். தங்கள் கிரிமினல் நடவடிக்கைகளைத்தான் இப்படி பொடி வைத்துச் சொல்கிறார் சூர்யா.

  சி.பி.ஐ என்டர்வியூ

  சி.பி.ஐ என்டர்வியூ

  சி.பி.ஐ வேலைக்கு ஆள் எடுப்பதற்காக இன்டர்வியூ நடத்துகிறார்கள் சூர்யா குழுவினர். இன்டர்வியூவுக்கு வந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கே தெரியாமல் ஒரு கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்துகிறார்கள். இதே கதைதான் 'ஸ்பெஷல் 26' படத்திலும் இடம்பெறும். ஆனால், நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களை இந்த டீசரில் காட்டவில்லை.

  காட்சிகளும் அப்படியேவா

  காட்சிகளும் அப்படியேவா

  இந்தி 'ஸ்பெஷல் 26' படத்தில் அக்‌ஷய் குமாரின் கூட்டாளியான அனுபம் கெர் செருமுவதைக் கூட அப்படியே இங்கே சூர்யாவுடன் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் செருமுவதாகக் காட்டியிருக்கிறார்கள். எனவே, 'தானா சேர்ந்த கூட்டம்' படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் அப்பட்டமான காப்பி எனக் கூறப்படுகிறது.

  கீர்த்தி சுரேஷ்

  கீர்த்தி சுரேஷ்

  இந்தியில், மனோஜ் பாஜ்பாயி நடித்த வேடத்தில் தான் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்திருக்கிறார் போல. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த கேரக்டரில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தியில் உருவான கலகலப்பான திரைக்கதைக்காக செந்தில் இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.

  ரீமேக் உரிமை

  'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் தனது மகன் பிரசாந்த்தை ஹீரோவாக வைத்து உருவாக்குவதற்காக வாங்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் வெளிப்படையாக அறிவிக்காமல் அதே படத்தை எடுத்துவிட்டார். இதனால் ஏதும் பஞ்சாயத்து கிளம்புமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

  English summary
  'Thaana serndha koottam' film's teaser was released yesterday evening. This film is directed by Vignesh Shivan. TSK film is said to be a copy of the super hit film 'Special 26' in Bollywood.Many of the people said that this film is a blatant copy. Let's see the 'Special 26' story now.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X