Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
அஜித்தை முந்திய சூர்யா... 'TSK' டீசர் சாதனை!
Recommended Video
சென்னை : தமிழ்த் திரைப்படங்களின் டீசர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும், மிகப்பெரும் சாதனையை யூ-ட்யூபில் படைத்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 'விவேகம்', 'மெர்சல்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளன.
'விவேகம்' படம் உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்தது. அதற்கு முன் முதலிடத்தில் இருந்த 'ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' டீசரின் சாதனையை 'விவேகம்' டீசர் முறியடித்தது.
அதன்பின் வெளிவந்த 'மெர்சல்' படத்தின் டீசர், 'விவேகம்' டீசரின் லைக்குகள் சாதனையை முறியடித்து, தற்போது 10 லட்சம் லைக்குகளுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. மெர்சல் டீசரின் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.
தற்போது, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் 'விவேகம்' டீசரின் லைக்குகள் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தச் சாதனையை 80 லட்சம் பார்வைகளுடன் புரிந்துள்ளது. இப்போது உலக அளவில் 'மெர்சல்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'விவேகம்' ஆகிய படங்களின் டீசர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.