கலைப்புலி தாணுவுக்கு மீண்டும் கால்ஷீட் தந்த விஜய்... அட்லீ இயக்குகிறார்!

By Shankar

தொடர்ந்து தன் படங்கள் பெரும் சர்ச்சைகளில் சிக்குவதைத் தொடர்ந்து, எதையும் சமாளிக்க வல்லவரான கலைப்புலி தாணுவுக்கு மீண்டும் கால்ஷீட் தந்துள்ளார் நடிகர் விஜய்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ராஜா ராணி மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ.

Thaanu is the producer for Vijay - Atlee film

இப்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து தன் மேனேஜர் பிடி செல்வகுமார் தயாரிக்க, சிம்பு தேவன் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்குகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குபவர் இவர்தான் என பலரையும் சுட்டிக் காட்டி வந்தனர்.

ஆனால் இப்போது அந்த அதிர்ஷ்டம் இளம் இயக்குநரான அட்லீக்கு வாய்த்துள்ளது. ராஜா ராணி என்ற ஒரே ஒரு ஹிட் படத்தைக் கொடுத்த அட்லீயை விஜய் தன் இயக்குநராக தேர்வு செய்திருப்பது திரையுலகில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

இந்தப் படத்தை கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். தாணு ஏற்கெனவே விஜய்யை வைத்து சச்சின், துப்பாக்கி படங்களைத் தயாரித்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ இப்படம் குறித்த அறிவிப்பு வரவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X