»   »  கபாலி ஆப்... இன்று இரவு 11 மணிக்கு வெளியிடுகிறார் தாணு!

கபாலி ஆப்... இன்று இரவு 11 மணிக்கு வெளியிடுகிறார் தாணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி படம் குறித்த அனைத்து தகவல்களையும் பெற வசதியாக புதிய செயலி (ஆப்) ஒன்றை இன்று இரவு 11 மணிக்கு வெளியிடுகிறார் கலைப்புலி தாணு.

கபாலி படத்தின் பாடல்கள் நாளை இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது. ரசிகர்கள் இந்த பாடல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Thaanu to release Kabali App

அவர்களின் ஆவலை மேலும் அதிகரிக்கும் வகையில் கபாலி ஆப் வெளியாகிறது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு இந்த ஆப்பை தாணு வெளியிடுகிறார். ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்ட் போன்களுக்கு ஏற்ற வகையில் இந்த செயலி இருக்கும்.

இதில் கபாலி பற்றிய செய்திகள், ட்ரைலர், வீடியோ பேட்டிகள், பாடல்கள் என அனைத்தும் கிடைக்கும்.

English summary
Kalaipuli Thaanu will release a new app for Kabali movie today at 11 PM.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil