பாலாவுக்கு இது சவாலான படம் - இளையராஜா

By Shankar

தாரை தப்பட்டை படம் பாலாவுக்கு சவாலான படமாக இருக்கும் என்று இளையராஜா கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்று வரும் "தாரை தப்பட்டை' படப்பிடிப்புத் தளத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா புதன்கிழமை சென்றார்.

திரைப்பட இயக்குநர் பாலா இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு தஞ்சாவூர் கரந்தை வடவாற்றுப் பாலப் பகுதியில் ஒரு மாதமாக நடைபெறுகிறது.

வரவேற்பு

வரவேற்பு

இது இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரமாவது படம். இந்நிலையில், இந்தப் படப்பிடிப்புத் தளத்துக்கு புதன்கிழமை சென்ற அவருக்கு மங்கள இசை இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சவாலான படம்

சவாலான படம்

அப்போது அவர் கூறுகையில், "இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டதன்பேரில் போகும் வழியில் இந்தப் படப்பிடிப்பைப் பார்க்க வந்தேன். பாலாவுக்கு மற்ற எல்லா படங்களையும்விட இது சவாலான படம். இதை அவர் சிரத்தையோடு உருவாக்கி வருகிறார்," என்றார் இளையராஜா.

தப்பாட்டம்

தப்பாட்டம்

பின்னர் அங்கு நடைபெற்ற தப்பாட்டக் கலைஞர்களின் ஆட்டத்தை ரசித்தார். அப்போது, இயக்குநர் பாலா, தவில் கலைஞர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சசிகுமார்

சசிகுமார்

படத்தின் நாயகன் சசிகுமார் கூறுகையில், சேது படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தபோது இதே பகுதியில் பணியாற்றி, அவரிடம் பட இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன். இப்போது அவரது படத்திலேயே நடிப்பதில் மகிழ்ச்சி. இதுவரை நடித்த படங்களைவிட இது வித்தியாசமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் படங்களை இயக்கவுள்ளேன் என்றார் அவர்.

வரலட்சுமி

வரலட்சுமி

படத்தின் நாயகி வரலட்சுமி கூறுகையில், "இது என்னோட நான்காவது படம். முதல் முறையாகக் கிராமத்துப் பெண்ணாக நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இது நடனம் குறித்த படம். இதுவரை மேற்கத்திய நடனம்தான் ஆடினேன். இதில், கரக்காட்டக் கலைஞராக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் வரலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X